India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, வரும் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ISIS அமைப்பு, மைதானத்தில் புகுந்து ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலை கருத்தில் கொண்டு, மைதானத்தில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து தமாகா மாநில நிர்வாகி ஈரோடு கவுதமன் அக்கட்சியில் இருந்து விலகினார். மூப்பனார், வாசனுடன் இணைந்து 40 ஆண்டு காலமாக அரசியலில் பயணித்து வந்த அவர், மோடியை கடுமையாக விமர்சித்ததோடு, அரசியல் ரீதியாக வாசனுடன் இனி பயணிக்க முடியாது என்ற நிலையில், தமாகாவில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக கூறியுள்ளார். தன்னை போல கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
குமரியில் கடலுக்கு நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவிடம் உள்ள பாறை மீது அமர்ந்து, சிவனை நினைத்து கன்னியாகுமரி தேவி தவம் இருந்ததாகவும், அந்த பாறை மீது கன்னியாகுமரி தேவியின் கால்தடம் உள்ளதாகவும் ஆன்மிக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜுன் 1 இறுதிக்கட்ட தேர்தல் நடப்பதால் அன்று தொலைக்காட்சி நேரலையில் தோன்றி வாக்காளர்களை ஈர்க்கவே மோடி குமரி வருவதாக விமர்சித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன.
இந்தியாவின் ஆன்மிக தலைவர்களில் ஒருவரான விவேகானந்தர், குமரிக்கு 1892இல் வந்து தற்போது அவர் பெயரில் உள்ள மண்டபம் அமைந்துள்ள பாறை மீது 3 நாள்கள் தியானம் செய்தார். பிறகு 1893 சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று பேசி உலகப் புகழ்பெற்றார். இதனால் குமரியில் அவர் பெயரில் விவேகானந்தர் நினைவிடம் கட்டப்பட்டது. இன்று அங்கு வரும் மோடி, அந்த பாறை மீது அமர்ந்து தியானம் செய்யவுள்ளார்.
புத்தரின் வாழ்வில் சாரநாத் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதுபோல விவேகானந்தர் வாழ்வில் கன்னியாகுமரி பாறை ஏற்படுத்தியதாகக் கூறும் பாஜகவினர், விவேகானந்தரின் தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்றுவதில் கொண்ட உறுதியை வெளிப்படுத்தவே, அந்த இடத்தை மோடி தேர்வு செய்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதுபோல பலரும் பல கருத்து கூறும் நிலையில், எது உண்மை என்பதை மோடி மட்டுமே அறிவார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி75 நாள்களில் சுமார் 180 பேரணிகளில் பங்கேற்றுள்ளார். உ.பி., பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் & தென்னிந்தியா (ஐந்து மாநிலங்கள்) 35 பேரணிகளில் கலந்துகொண்ட அவர், மே மாதத்தில் மட்டும் 96 கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பஞ்சாபில் நடைபெறும் பேரணியுடன் அவரது பிரசாரம் நிறைவடைகிறது.
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி 272 இடங்களுக்கும் மேல் வென்று ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிக இடங்களைப் பெறும் கட்சியே கூட்டணியின் தலைமையாக இருக்கும் எனக் கூறிய அவர், வென்ற 48 மணி நேரத்தில் பிரதமர் யார் என்பது உறுதியாகி விடும் என்றார். அத்துடன், NDA கூட்டணியில் உள்ள பல கட்சிகள் INDIA கூட்டணியில் வந்து இணைய வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
தென் தமிழகத்தில் சில இடங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 4இல் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்கும் புதிய அரசு வங்கித்துறையில் முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, நீண்ட காலமாக பாஜக அரசு திட்டமிட்டு வந்த ஐடிபிஐ-யை தனியார் மயமாக்கும் பணி வேகமெடுக்கலாம் என்றும் மறுபுறம், 2016இல் கொண்டு வரப்பட்ட திவால் நிலை குறியீட்டில் (IBC) மாற்றம் செய்யவுள்ளதாகவும் ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர் சந்தன் சின்கா தெரிவித்துள்ளார்.
எம்பி தேர்தலில் இதுவரை 8 பேர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் மிக குறைவாக ஆந்திராவின் அனகபள்ளி தொகுதியில் 1989இல் காங்கிரசின் கொணத்தலா ராமகிருஷ்ணா 9 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிஹாரின் ராஜ்மஹாலில் 1998இல் பாஜகவின் சோம் மராண்டி 9 வாக்கு வித்தியாசத்திலும், குஜராத்தின் பரோடாவில் 1996இல் காங்கிரசின் சத்யசிங் 17 வாக்கு வித்தியாசத்திலும் வென்றனர்.
Sorry, no posts matched your criteria.