India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விராட் கோலி உடனான தனது உறவு குறித்து நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கோலி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் வித்தியாசம் உள்ளது. அணியின் வெற்றிக்காக கருத்துத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது மக்களுக்கு பொழுதுபோக்கு அளிப்பதற்கானது அல்ல” எனக் கூறினார்.
பிரதமர் மோடி குமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு தியானம் செய்ய செல்லவில்லை, படப்பிடிப்பில் பங்கேற்பதற்காகவே செல்கிறார் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் பாறையில், கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்த உடன், மோடி தியானம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வரத்து குறைவால் வாழைத்தார் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹500க்கு விற்பனையான செவ்வாழைத்தார் தற்போது ₹1,500க்கும், ₹300க்கு விற்பனையான கற்பூரவள்ளி வாழைத்தார் தற்போது ₹700க்கும், ₹200க்கு விற்பனையான நாட்டு வாழைத்தார் ₹600க்கும், பூவம் பழத்தார் ₹400 – ₹450க்கும் விற்பனையாகிறது. அதேபோல், தக்காளி, முட்டைகோஸ், பீட்ரூட், மிளகாய். உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளன.
‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த 2020இல் வெளியான இப்படம், மிகப்பெரிய வசூலைக் குவித்தது. இந்நிலையில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை கொண்டு 2ஆம் பாகம் உருவாக உள்ளதால், படத்திற்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ எனப் பெயரிட போவதில்லை என்றும், அதேபோல், இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் இவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ முதன்மை நீதிமன்றம் பரிந்துரைத்தது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடி 21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். 2, 3ஆவது செட்டில் தடுமாறிய சிந்து, 11-21, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார். இது கரோலினாவுக்கு எதிரான 6ஆவது தொடர் தோல்வி ஆகும்.
2009 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் துருவ் நாராயணன், மஜத வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை விட 1 வாக்கு அதிகம் பெற்று வென்றார். துருவ் நாராயணனுக்கு 40,752 வாக்குகளும், கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 வாக்குகளும் கிடைத்தன. 2008 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கல்யாண் சிங் செளஹான் (62,216), காங்கிரஸ் வேட்பாளர் சிபி ஜோஷியை (62,215) விட 1 வாக்கு அதிகம் பெற்று வென்றார்.
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனையடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப்பணியையும், மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் பரமசிவம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறியுள்ளார்.
பணத்தால் பொருட்களை வாங்குவதை விட, இசை நிகழ்ச்சி, உணவு, சுற்றுலா செல்வது போன்றவற்றிற்காக பணத்தை செலவிடுவது மக்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக குழு இது தொடர்பாக 1,400 பேரிடம் நடத்திய ஆய்வில், பணத்தை செலவு செய்த பின் ஏற்படும் உணர்வுகளை 1 முதல் 9 வரை அளவிட கோரப்பட்டது. முடிவில், பொருட்களுக்காக செலவிடுவது திருப்தி தரவில்லை எனத் தெரிய வந்தது.
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு வரும் ஜூன் 24ஆம் தேதி முதல், மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 60% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் இணைந்தார். அங்கு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு, மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.