news

News May 30, 2024

கொரோனா உயிரிழப்பு படிப்படியாக குறைவு

image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் கணிசமாக குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் நடத்திய இந்த ஆய்வில், தொற்றால் பாதிக்கப்பட்டு 30 நாள்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல் பாதிப்பு விகிதம் 182%, 57%, 34% என படிப்படியாக குறைகிறது என்றும், ஆனால், தொற்று உடலில் புதிய பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News May 30, 2024

பாஜக தோல்வியடையும் : ப.சி

image

மக்களவைத் தேர்தல் பரப்புரைகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பேசுபொருளானது என்றும், இந்த தேர்தலில் காங்கிரஸ் தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளர். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்திற்கு உரிய விளக்கம், தீர்வை தர பிரதமர் மோடி தவறிவிட்டார். இதன்காரணமாக பாஜக தோல்வியடையும். காங்., கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

நெய்மரின் அல்-ஹிலால் அணி புதிய கின்னஸ் சாதனை

image

சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில், தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்று ‘நெய்மரின் அல்-ஹிலால்’ அணி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 2023 செப்டம்பர் – 2024 ஏப்ரல் வரை நடைபெற்ற லீக் போட்டிகளில், 34 முறை அல்-ஹிலால் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், 96 புள்ளிகளுடன் அல்-ஹிலால் அணி முதலிடத்தைப் பிடித்தது. இதற்கு முன்னதாக, 2016இல் ‘வெல்ஷ் கிளப் தி நியூ செயிண்ட்ஸ்’ அணி 27 முறை வென்றிருந்தது.

News May 30, 2024

எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரம் பழுதானால்?

image

வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு இயந்திரம் பழுதானால், அந்த வாக்கு இயந்திரம் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, மற்ற இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அனைத்து வாக்கு இயந்திரங்களும் எண்ணப்பட்ட பிறகு, பழுதான இயந்திரம் எண்ணிக்கைக்காக எடுக்கப்படும். இறுதியாக, முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கான வாக்குகளின் மார்ஜின் கணக்கிடப்படும். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும்.

News May 30, 2024

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ராகுல் நன்றி

image

இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில், அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ராகுல் நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் மகத்தான மக்களை வணங்குகிறேன் எனக் கூறிய அவர், INDIA கூட்டணி அரசு அமையும் என அஞ்சாநெஞ்சமுள்ள காங்., தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன். தவறாக பிரதமர் திசை திருப்ப முயன்றும் பொதுநலன் சார்ந்த பிரச்னைகளில் போராடி வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

சரியாக தூங்கவில்லை என்றால்….

image

மனிதர்கள் ஒருநாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும், இல்லையேல் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படுமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். * நோய்கள் உருவாக வாய்ப்பு *இதய நலன் பாதிக்கப்படக்கூடும் *புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கக்கூடும் *சிந்தனைத் திறன் குறையக்கூடும் *நினைவாற்றலை பாதிக்கக்கூடும் *தாம்பத்திய உறவை பாதிக்கக்கூடும் * உடல் எடை அதிகரிக்கக்கூடும் * தோளில் முதுமை தோற்றம் ஏற்படும்

News May 30, 2024

சனாதனம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: ஆளுநர்

image

விருந்தோம்பல் குணத்தால், நமது DNAவிலேயே சனாதன தர்மம் இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம், கோவா மாநிலம் உருவான தின விழாவில் பேசிய அவர், இந்திய மக்களிடம் சனாதனம் பரவி இருப்பதாக தெரிவித்தார். அரசால் எதையும் தனியாக செய்ய முடியாது, மக்கள் நினைத்தால் மட்டுமே, எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறும் என்றும், அதுபோல, ஒற்றுமையை வலியுறுத்தும் சனாதனம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார்.

News May 30, 2024

வாக்குகளை எண்ணும் நடைமுறை என்ன?

image

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரம் கழித்து, மின்னணு வாக்கு இயந்திரங்களை எண்ண தேர்தல் அதிகாரி அனுமதி அளிப்பார். இறுதிச் சுற்று வரை மின்னணு இயந்திரங்கள் எண்ணப்படும். ஆனால், தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே, மின்னணு வாக்கு இயந்திரத்தின் இறுதிச்சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

News May 30, 2024

27,000 ரன்களை கடக்கப்போகும் விராட் கோலி

image

சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடக்க, விராட் கோலிக்கு இன்னும் 267 ரன்கள் மட்டுமே தேவை. 34,357 ரன்களுடன் சச்சின் முதல் இடத்தில் இருக்க, 26,733 ரன்களுடன் விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர்களில், 2 முறை அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை உடைய விராட் கோலி, வரப்போகும் உலகக் கோப்பைத் தொடரில் 27,000 ரன்களை நிச்சயம் கடப்பார் என ரசிகர்கள் பேரார்வத்துடன் உள்ளனர்.

News May 30, 2024

தமிழகத்தில் பள்ளித்திறப்பு தள்ளிப்போகுமா?

image

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடும் வெப்பம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஜூன் 6ஆம் தேதிக்கு பதில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளித்திறப்பு தள்ளிப்போகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

error: Content is protected !!