news

News May 31, 2024

ஆதாருடன் PAN இணைக்க இன்றே கடைசி நாள்

image

PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும். வரி செலுத்துவோர் அனைவரும் மே 31ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆதார் எண்ணை PAN உடன் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், அதிக டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் PAN எண் செயல்படாததாகக் கருதப்படும்.

News May 31, 2024

தடைகளை மீறி நடந்த பட்டினப் பிரவேசம்

image

பல தடைகளையும் மீறி தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தருமபுரம் ஆதீன மடாதிபதியான குருஞான சம்மந்த சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளி பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். 70க்கும் அதிகமான பக்தர்கள் அவரை சுமந்து வலம் வந்தனர். மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டு முதல் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

News May 31, 2024

ஓங்கி குத்துவிட்ட அஞ்சலி பாஸ்கர்

image

இளம் வயதில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்திருக்கிறார் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கர். ஒருமுறை அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது நடுத்தர வயதுடைய ஒருவர் உரசியதாகவும், அவரது வயிற்றில் ஓங்கி குத்து விட்டவுடன் அவர் இறங்கி சென்றுவிட்டதாகவும் அப்போது பேருந்தில் இருந்த யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அஞ்சலி பாஸ்கர் ஆதங்கம் தெரிவித்தார்.

News May 31, 2024

கண்ணீர் விட்ட வடிவேலு

image

அண்மையில், சன் தொலைக்காட்சியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். அதில் வடிவேலு கண்கலங்கி பகிர்ந்த விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு வாழ்க்கையில் சோறு போட்ட தெய்வம் என்றால், அது ராஜ்கிரண் தான் என்று நினைவுகூர்ந்தார். சினிமாவிற்குள் தான் வருவதற்கு அவர் தான் காரணம் என்று கண்ணீர் மல்க பேசினார்.

News May 31, 2024

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

image

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார். ஜூன் 11ல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாள்கள் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 19ல் நிறைவடைய உள்ளது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளுக்குப் பிறகு, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த ஆலோசனை நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

News May 31, 2024

பவுலிங்கில் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார்: ரிக்கி பாண்டிங்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் பும்ரா பேட்ஸ்மேன்களை திணறடித்து, விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அத்துடன், ரன் எடுப்பதையும் குறைக்கிறார். அவரால் புதிய பந்தில் ஸ்விங் செய்ய முடியும்” என்றார்.

News May 31, 2024

நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

image

நீட் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மே5ம் தேதி நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்புகள், மாணவர்களின் விடைத்தாள் நகல்கள், அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விடைகளுக்கான மதிப்பீட்டில் ஆட்சேபனை இருந்தால், நாளை இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News May 31, 2024

சரிவில் இருந்து மீண்ட வீரன் ரிஷப் பண்ட்

image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 17 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய அணிக்காக விளையாடவுள்ளார். சாலை விபத்தில் சிக்கி, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ ஓய்வில் இருந்த அவர், ஐபிஎல் மூலம் மறுபிரவேசம் செய்தார். அதில் அபாரமாக ஆடியதால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கும் தேர்வானார். அவரை சரிவில் இருந்து மீண்ட ஆடுகள வீரனாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

News May 31, 2024

‘டிரம்ப் குற்றவாளி’ நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

image

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு முறைகேடாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் தனது அந்தரங்க ரகசியங்களை மறைக்க நடிகைக்கு சுமார் ரூ.110 கோடி அளித்திருந்தார். இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைக்க நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடி

image

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார். 3 நாள்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ள அவர், தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற அவர், இரவு 7 முதல் 7.30 வரை தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அறைக்கு திரும்பிய அவர், இன்று காலை முதல் மீண்டும் தியானத்தைத் தொடங்குகிறார்.

error: Content is protected !!