India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1999 ஆம் ஆண்டில் புரொபேஷன் எஸ்.ஐ.,யாக காவல்துறை பணியில் சேர்ந்த வெள்ளைத்துரையை ஏ.டி.எஸ்.பி.,யாக குறுகிய காலத்தில் உயர் பதவிகளை என்கவுன்டர் திறமையால் பெற்றவர். திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த 25 ஆண்டுகளில் அயோத்தி குப்பம் வீரமணி உள்ளிட்ட 12 உயிர்களை அவரது துப்பாக்கி பறித்திருக்கிறது. வீரப்பன் வழக்கில் டபுள் ப்ரோமோஷன் வாங்கிய வெள்ளத்துரையை தெரியாத ரவுடிகளே இருக்க முடியாது.
₹10 ரூபாய் தாள்களை எப்போது கடைசியாக பார்த்தீர்கள்? அவற்றின் புழக்கம் பொது வெளியில் கணிசமாகக் குறைந்துள்ளதை உணர முடிகிறது. ஆனால், அதற்கான காரணம் எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அதிகளவில் வெளியிடுவதாகவும் அவையே புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் எப்போது 10 ரூபாய் தாளை கடைசியாகப் பார்த்தீர்கள்?
வால்மார்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னணி ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான PhonePay, 6 வகை பாதுகாப்பான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் பயனர்கள் மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், வாகனம், வீடு/சொத்து & கல்விக் கடன்களை விரைவாகப் பெறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வங்கிகள் & வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் ஃபோன் பே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளைத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2013இல் சிவகங்கையில் பணியிருந்தபோது, நடந்த கைதி ஒருவரின் காவல் நிலைய மரணத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை முடிவில் தெரியவந்தது. இந்நிலையில், பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ரயிலில் ₹4 கோடி பிடிபட்ட வழக்கில் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கில் இன்று ஆஜராகுமாறு அவர் உள்பட பாஜகவினர் 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்கு பின் ஆஜராவார் என்றும் வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பைவிட எல்ஐசி நிர்வகித்து வரும் நிதியின் அளவு அதிகமென புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.எம்.எஃப் தகவலின்படி, பாகிஸ்தான் ₹28.2 லட்சம் கோடி, இலங்கை ₹6.2 லட்சம் கோடி, நேபாள் ₹3.68 லட்சம் கோடி ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை கொண்டுள்ளன. அதே நேரத்தில் எல்ஐசி ₹51.21 லட்சம் கோடி நிதியை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கத்து.
மும்பை தீவிரவாதத் தாக்குதலை மையமாக வைத்து தயாரான ‘மேஜர்’ படத்தை பார்த்து தன்னை அறியாமல் அழுதுவிட்டதாக நடிகர் காஜல் அகர்வால் கூறியுள்ளார். நிஜத்தில் அந்த தாக்குதலுக்கும் தனது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிய அவர், தாக்குதல் நடந்த தாஜ் ஓட்டலின் அருகில்தான் தன் வீடு இருந்தது என்றார். மேலும், அந்தப் படத்தை பார்த்ததில் இருந்து நீண்ட நேரம் அந்தக் கால நினைவை அசை போட்டதாகக் கூறினார்.
பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு நீதிமன்றம் விரைவில் தண்டனை அறிவிக்கவுள்ளது. 235 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாற்றில், முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஒரு லட்சம் கிலோவுக்கும் (100 டன்) மேலான சொக்கத் தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது RBI. அதன் கையிருப்பில் சுமார் 822 டன் தங்கம் உள்ளது. ஆனால், அவற்றை வெளிநாடுகளில் சேமித்து வைக்கும் வழக்கம் சுதந்திரம் பெற்றது முதலே இருந்து வருகிறது. அந்நிலையை மாற்றும் விதமாக, அதற்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நமக்கு சொந்தமான தங்கம், உள் நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டை காட்டி, பேருந்துகளில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணிக்க முடியும் எனத் தெரிகிறது. அண்மையில் காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்கள் வாயிலாக காவலர்களுக்கு ஜூலைக்குள் ஸ்மார்ட்கார்டு விநியோகிக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.