India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐ.நா. சபையால் ‘உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில், பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. காலையில் காபியில் தொடங்கி, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், சுவையைக் கூட்ட நெய் எனப் பால் இல்லாத நாளே இல்லை. 5-40 வயதுக்குட்பட்டோர் தினமும் 400ml பால் அருந்துவது நல்லது.
டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த மைதானம், 34,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதேபோல் தற்போதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டிக்கு 8 நாள்கள் உள்ள நிலையில், ஒரு டிக்கெட் விலை ₹8.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
7ஆவது கட்டத் தேர்தலையொட்டி, எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், 7ஆவது கட்டத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், இளைஞர்களும், பெண் வாக்காளர்களுக்கும் தங்களது வாக்கை சாதனை அளவில் பதிவு செய்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை மேலும் துடிப்புடையதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 9ம் தேதி மோதவுள்ளன. 2 அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6, பாகிஸ்தான் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2 அணிகளும் பன்னிரெண்டு டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8, பாகிஸ்தான் 3 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.
ஈரான் அதிபர் ரைசி, அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர். இந்த விபத்தின் பின்னணியில் இஸ்ரேல், அமெரிக்க சதி இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஹெலிகாப்டர் சிதைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த ஈரான், விபத்திற்கு நாசவேலையோ, குண்டுவெடிப்போ காரணமில்லை எனத் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில், 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 20% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. மத்திய அரசு ‘ஜன் அவ்ஷாதி’ என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களைத் தொடங்கி வருகிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 தொடங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான இட வசதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 7ஆவது கட்டத் தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, கருத்து கணிப்பு வெளியிட EC விதித்த தடை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மேலும் மாலை 6.30 மணி முதல் கருத்து கணிப்பு வெளியிட EC அனுமதி அளித்துள்ளது. இந்த கருத்து கணிப்புகளை உடனுக்குடன் Way2newstamil Appஇல் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ரஜினி விரும்பினால், மீண்டும் அவருடன் இணைவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரஜினியிடம் நிறைய கதை சொன்னதாகவும், ஆனால், அவை சரியாக அமையவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களை இயக்குவது இயக்குநர்களுக்கு இலக்காக இருக்க கூடாது என்றும், தான் அவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில், 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 178/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, குல்பாதின்-69 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இப்போட்டியில், ஆப்கன் வீரர்கள் 9 பேர் பந்துவீசியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.