news

News June 1, 2024

கருப்பாக மாறிய ஹன்சிகா மோத்வானி

image

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து, பின்னர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் வந்து கலக்கியவர். திருமணத்திற்கு பிறகும் கைவசம் அரை டஜன் படங்களை அவர் வைத்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் காந்தாரி என்ற படத்தில் ஹன்சிகா தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தில், அவர் பழங்குடியினப் பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அவர் தனது தோற்றத்தை கருப்பாக மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார்.

News June 1, 2024

சென்னையில் வெப்பம் அதிகரிக்கும்

image

சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C
மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெப்பம் குறைந்தாலும், சென்னையில் குறையாது என்று கூறப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 1, 2024

‘வணங்கான்’ ஜூலை மாதம் வெளியீடு

image

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஜூலை மாதத்தில் ‘இந்தியன் 2’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டும் ஒரே தேதியில் வெளியாகுமா அல்லது வெவ்வேறு தேதிகளில் வெளியாகும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

News June 1, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைவு

image

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ₹53,680க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹20 குறைந்து ₹6,710க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹98க்கு விற்பனையாகிறது.

News June 1, 2024

9 மணி நிலவரப்படி 11.31% வாக்குகள் பதிவு

image

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார் – 10.58%, சண்டிகர் – 11.64%, இமாச்சலப் பிரதேசம் – 14.35%, ஜார்க்கண்ட் – 12.15%, ஒடிசா – 7.69%, பஞ்சாப் – 9.64%, உத்தரப் பிரதேசம் – 12.94%, மேற்கு வங்கம் – 12.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News June 1, 2024

ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள் (1)

image

57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பஞ்சாப்பில் வாக்கு செலுத்தினார். அதேபோல், பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஹிமாச்சலில் எம்.பி. அனுராக் தாகூர், கொல்கத்தாவில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

News June 1, 2024

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ₹5 முதல் ₹20 வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வானது நாளை நள்ளிரவு (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் இந்த கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News June 1, 2024

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை

image

சூதாடிய குற்றத்திற்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், டி20 உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியாது.

News June 1, 2024

“தனி ஒருவன்” ஜெயம் ரவிக்காக எழுதப்பட்டதல்ல

image

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது தனி ஒருவன் படம். அந்த படத்தை ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். அண்மையில் பேட்டியளித்துள்ள மோகன் ராஜா, தனி ஒருவன் திரைக்கதை ஜெயம் ரவிக்காக எழுதப்பட்டதல்ல, பிரபாசுக்காக எழுதப்பட்ட கதை, ஆனால் அவர் ஆர்வம் காட்டாததால் ஜெயம் ரவியை வைத்து படத்தை எடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

News June 1, 2024

பள்ளித் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும்: ஓபிஎஸ்

image

தமிழகத்தில் ஜூன் 3ஆவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், அரசே வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பதை மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!