India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இடது தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார். கடந்த 7 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த 10 நாட்களுக்கு வைகோவை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என மதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த காங்., கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., நோட்டாவுக்கு கீழ் சென்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 1994 தேர்தலில் 15% வாக்குகள், 2004 தேர்தலில் 26.13% வாக்குகளை பெற்றிருந்த காங்., படிப்படியாக குறைந்து, தற்போது நோட்டாவுக்கு கீழ் சரிந்துள்ளது. அதே நேரம், பாஜகவின் வாக்கு வங்கி 5%ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை வீசி வருவதால், வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, டெலிவரி வேலை செய்பவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில், நண்பகல் நேரத்தில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்க்கும் படி, வாடிக்கையாளர்களுக்கு சொமேட்டோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அவசியம் இருந்தால் மட்டும் நண்பகலில் ஆர்டர் செய்ய வலியுறுத்தியுள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், அப்போதைய பாஜக அரசை 40% கமிஷன் அரசு என விமர்சித்தார். தவறான தகவல்களை ராகுல் மக்களிடம் கூறியதாக பாஜக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், ஜூன் 7ஆம் தேதி நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர் கங்கனா ரனாவத், காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கிடம் தோல்வி அடைவார் என TIMES NOW செய்தி ஊடகம் கணித்துள்ளது. அதே போல, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியிடம், பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தோல்வியடைவார் என கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒரு கட்சிக்கு ஆதரவாக வந்தாலும், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வந்த வரலாறு பல இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. *பொது வெளியில் தாங்கள் ஆதரித்த கட்சியை வாக்காளர்கள் மாற்றி குறிப்பிட வாய்ப்புள்ளது. *கருத்துக்கணிப்பில் பங்குபெறும் வாக்காளர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. *பல நிறுவனங்கள் கட்சிகளின் ஆதரவோடு கருத்துக்கணிப்புகளை நடத்துகின்றன.
மெட்டா நிறுவனம், இந்தியாவில் ஆட்சேபனைக்குரிய 1.7 கோடி பதிவுகளை ஏப்ரல் மாதம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவன விதிகளின் அடிப்படையில், 1.16 கோடி மோசமான பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் இருந்தும், 54 லட்சம் மோசமான பதிவுகள் இன்ஸ்டாகிராமில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், பயனாளர்களின் 17,124 குறைகளில், 9,977 குறைகளை சரி செய்துள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது.
சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நோட்டாவை விட மிக குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 0.99% வாக்குகளும், காங்கிரஸூக்கு 0.32% வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் தேர்தல் வரலாற்றிலேயே இதுபோன்ற மிகப்பெரிய தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறை. ஆனால், கடும் போராட்டத்திற்கு மத்தியில் நோட்டாவை பின்னுக்குத்தள்ளி பாஜக 5.18% வாக்குகள் பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டி-யில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணி, ஜூன் 8இல் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய பயிற்சி போட்டியில் அவர் காயமடைந்த நிலையில், ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்பு ஒன்றில், ராஜஸ்தானில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என்று கூறுவதாக தெரிவித்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதியே 25 இடங்கள் தான் என்றார். தேர்தலுக்கு 3 நாள்கள் முன்பு இந்த கருத்துக்கணிப்புகள் சந்தேகத்தை எழுப்புவதாகவும், தேர்தல் முடிவுகள் மாறாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.