India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில், இத்தேர்தலில் வெற்றிபெற்று பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகும் பட்சத்தில், நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பாஜக அலுவலகம் வரை தொண்டர்கள் புடைசூழ வெற்றிப்பேரணி செல்ல மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பதிவிட்டுள்ள அவர், X தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு இருப்பதாகவும், அதை தயவு செய்து யாரும் பின் தொடர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த போலி கணக்கை சுமார் 80 ஆயிரம் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இந்தியாவின் ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை நிதிஷ் குமார் திடீரென சந்தித்து பேசினார். இந்நிலையில், தேர்தல் நேர கிளர்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர் எச்சரித்ததாக தெரிகிறது.
நாளை இந்தியாவின் தலைவிதியை மாற்றப்போகும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு காங்., தலைவர் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்பட வேண்டாம், அச்சமின்றி தங்கள் கடமையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நாட்டுக்காக தங்களது சேவையை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
97 கோடி வாக்காளர்கள், 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள், 8,360 வேட்பாளர்களுடன் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 543 தொகுதிகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. பல்வேறு கருத்துக்கணிப்புகளை கடந்து, மக்களின் உண்மையான ஒரு விரல் புரட்சி நாளை தெரிய வரவுள்ளது. பாஜக, காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை வெல்லும் என நீங்கள் கணிக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.
விதிகளை மீறியதாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 71 லட்சம் கணக்குகளை Whatsapp நிறுவனம் முடக்கியுள்ளது. மோசடி செயல்களைத் தடுக்கும் வகையில் மாதந்தோறும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் Whatsapp கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில், பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், விதிகளை மீறுவோரின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ராஜ்நந்த்கான் தொகுதியில் பல மையங்களில் வாக்கு இயந்திரங்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், அத்தொகுதியின் காங்., வேட்பாளருமான பூபேஷ் பாகேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 17சி படிவத்துடன் ஒப்பிடும் போது, வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளதாகவும், தேர்தல் முடிவில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கு யார் பொறுப்பு? எனவும், அவர் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
HDFC வங்கி சேவைகளை இன்று நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை பயன்படுத்த முடியாது என வாடிக்கையாளர்களுக்கு HDFC குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம், POS ஆகிய சேவைகளை 2 மணி நேரம் நிறுத்தி வைப்பதாக HDFC அறிவித்துள்ளது. அதிகாலை 2.30 மணியில் இருந்து அனைத்து சேவைகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் குறித்து அறிய தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அந்த வகையில், தென் சென்னையில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், திமுக சார்பில் சிட்டிங் எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் தேர்தல் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் தொகுதியில், கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற விசிக தலைவர் திருமாவளவன் இம்முறை அதே தொகுதியில் களம் கண்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் முடிவு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் களம் கண்ட நயினார் நாகேந்திரனின் தேர்தல் முடிவு கவனம் பெறும்.
Sorry, no posts matched your criteria.