news

News June 4, 2024

ஜெகனின் சாதனை முறியடிக்கப்படுமா?

image

கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபைத் தேர்தலில் YSR காங்., தலைவர் ஜெகன் மோகன் புலிவெந்துலா (கடப்பா) தொகுதியில் 1,32,356 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சதிஷ் ரெட்டியைக் (42,246) காட்டிலும் ஜெகன் 90,110 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். கடந்த தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் வித்தியாசம் இதுவே ஆகும். ஜெகனின் இந்த சாதனை இந்தத் தேர்தலில் முறியடிக்கப்படுமா?

News June 4, 2024

தபால் வாக்குகளில் அகிலேஷ் யாதவ் முன்னிலை

image

உ.பி முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கன்னாஜ் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் சுப்ரத் பதக் 2ஆவது இடத்தில் இருந்து வருகிறார். பி.எஸ்.பி வேட்பாளர் இம்ரான் பின் ஜாபர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News June 4, 2024

மதுரையில் முகவர்கள், போலீசார் வாக்குவாதம்

image

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார், வேட்பாளர்களின் முகவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்களை போலீசார் சோதனைக்கு உட்படுத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாகக் கூறி போலீசாருடன் கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். 800க்கும் மேற்பட்ட முகவர்களை ஒரே நேரத்தில் அனுமதித்ததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

News June 4, 2024

வேலூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம்

image

வேலூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களின் முகவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால், வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலையீட்டு இருதரப்பையும் சமாதானம் செய்து வருகிறார்கள்.

News June 4, 2024

கனிமொழி முன்னிலை

image

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளரான கனிமொழி முன்னிலையில் இருக்கிறார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

நெல்லை: சாவியை தொலைத்த அதிகாரிகள்

image

மக்களவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில், வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். இந்த சம்பவம் அரசியல் கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

News June 4, 2024

தபால் வாக்குகளில் சசி தரூர் முன்னிலை

image

கேரளா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருவனந்தபுரத்தில் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் 2ஆவது இடத்தில் இருந்து வருகிறார். சிபிஐ வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன், அடுத்த இடத்தில் உள்ளார் .

News June 4, 2024

இரு மடங்கிற்கு மேல் அதிகம் முந்தும் பாஜக

image

தபால் வாக்குகள் எண்ணும் பணியில் தற்போது வரை பாஜக கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 123 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால், இருமடங்குக்கு மேல் அதிகமாக பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பது அதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

News June 4, 2024

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை

image

புதுச்சேரியில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் காத்திருக்கின்றனர்.

News June 4, 2024

காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2ஆவது இடத்தில் உள்ளார்.

error: Content is protected !!