India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தபால் வாக்கில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. காஞ்சிபுரம், மத்திய சென்னை, வட சென்னை, தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக தற்போதுவரை முன்னிலை பெற்றுள்ளது. தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி முன்னிலையில் இருக்கும் நிலையில், வினோஜ் பி செல்வம், எல்.முருகன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டுள்ளார். அங்கு அவரை எதிர்த்து விக்ரமாதித்யா சிங் களம் கண்டார். இவர் இமாச்சலில் 6 முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் கங்கனா பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட IAS அதிகாரி வி.கே. பாண்டியன், முதல்வர் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு அமைச்சர் அந்தஸ்தில் பணி வழங்கப்பட்டது. ஆட்சி, கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வரும் அவர் மீது, பாஜக பல விமர்சனங்களை முன்வைத்தது. மண்ணின் மைந்தர் இன்றி, ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? என பிரசாரம் செய்தது. இது, பாஜகவுக்கு கை கொடுக்குமா? அல்லது பட்நாயக்கிற்கு சாதகமா?
புதுச்சேரியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 14, பாஜக 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 1 தொகுதியில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
நாகை தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் செலுத்திய தபால் வாக்குகளில், பெரும்பாலானோர் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த காலங்களை போல, தற்போதும் தபால் வாக்குகளில் திமுக ஆதிக்கம் செலுத்துகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் 50% ஆண்கள், 50% பெண்களை களமிறக்கும் அந்தக் கட்சி, இந்தத் தேர்தலிலும் அதே பாணியை பின்பற்றியுள்ளது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20 ஆண்கள், 20 பெண்கள் களத்தில் உள்ளனர். இதனிடையே, கடந்த தேர்தல்களில் NTK-வின் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் நல்லதம்பி 2ஆவது இடத்தில் உள்ளார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு அவரை எதிர்த்து சோனல் படேல் களம் கண்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அமித் ஷா முன்னிலை வகித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.