India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடியில் திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். திமுக 15,631, அதிமுக 4,039, தமாகா 2,333, நாதக 2,331 வாக்குகளும் பெற்றுள்ளன. அதேபோல், திருவள்ளூர் தொகுதியில் காங்., 4,260, தேமுதிக 2,335, பாஜக 1,621, நாதக 559 வாக்குகளும், நெல்லையில், காங்., 11,008, பாஜக 8,269, அதிமுக 1,594, நாதக 1,223 வாக்குகளும் பெற்றுள்ளன.
தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்திருந்த INDIA கூட்டணியின் கை தற்போது ஓங்கத் தொடங்கியிருக்கிறது. 9.30 நிலவரப்படி பாஜக 285 தொகுதிகளிலும் காங்கிரஸ் 221 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. பிற கட்சிகள் 23 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. மாறுமா ட்ரெண்ட்?
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜனதா தளம் 8 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜெகனின் YSR காங்., 12 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 13 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் YSR காங்., கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, திமுக 433, பாஜக 238, அதிமுக 159, நாதக 0 வாக்குகள் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்து வருகிறார். முதல் சுற்று முடிவில் அவர் 8,684 வாக்குகளை பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் பாஜக, ஜேடியூ கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், ஆர்ஜேடி தலைமையிலான INDIA கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகள் 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் INDIA கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவார் அணியானது பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார் அணி 8 தொகுதிக்கும் மேலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.