news

News June 5, 2024

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்

image

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 147 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியடைந்தது. இதையடுத்து தற்போது ஆளுநரை சந்தித்த நவீன் பட்நாயக் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். 2000 ஆண்டு முதல் ஒடிஷா முதல்வராக இருந்த அவர் தற்போது ஆட்சியை இழந்துள்ளார்.

News June 5, 2024

பிரதமர் மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

image

பிரதமர் மோடிக்கு எக்ஸ் பதிவு மூலம் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் முதல் தலைவர் நீங்கள்தான் என்றும், வளமான, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவீர்கள். பொருளாதாரம், சமூகநீதி, வேலைவாய்ப்பு துறைகளில் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள் என்று மக்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

News June 5, 2024

வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தல்: சந்திரபாபு நாயுடு

image

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த மக்கள் விரோத, மோசமான ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். விஜயவாடாவில் பேசிய அவர், தேர்தலில் TDP கட்சியை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தலைக் கண்டதில்லை எனத் தெரிவித்தார்.

News June 5, 2024

ஜெகனின் தவறான வியூகம் தோல்விக்கு காரணமா?

image

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 11, மக்களவையில் 4 தொகுதிகளில் மட்டும் ஜெகன் மோகனின் கட்சி வெற்றி பெற்றது. இதனால் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. இது அவருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். இலவசத் திட்டங்களை அமல்படுத்திய ஜெகன், தேர்தலில் அது தனக்கு கைகொடுக்கும் என நம்பி கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டார். அவரது இந்த தவறான வியூகமும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

News June 5, 2024

அண்ணாமலை தலைவராக நீடிப்பது நல்லதல்ல

image

தூத்துக்குடி தொகுதியில் 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்துள்ளார் கனிமொழி. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராகத் தொடர்வது பாஜகவிற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

News June 5, 2024

ஆட்சியமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்: தேஜஸ்வி

image

INDIA கூட்டணி ஆட்சியமைப்பதில் உறுதியாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அரசியலமைப்பை பாதுகாப்பதில் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய அவர், நாங்கள் ஏன் ஆட்சியமைக்க முயற்சிக்கக் கூடாது?. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்றார். மேலும், பெரும்பான்மைக்கு மிக தொலைவில் இருக்கும் பாஜக, கூட்டணி கட்சிகளை நம்பியே உள்ளது என்றார்.

News June 5, 2024

7 கட்டங்களில் பாஜக, காங்கிரஸ் பெற்ற வெற்றிகள்

image

7 கட்டத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனைத் தொகுதிகளில் வென்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
* 1ஆவது கட்டம்: பாஜக 30, காங். 27
* 2ஆவது கட்டம்: பாஜக 46, காங். 17
* 3ஆவது கட்டம்: பாஜக 57, காங். 15
* 4ஆவது கட்டம்: பாஜக 39, காங்.14
* 5ஆவது கட்டம்: பாஜக 19, காங். 5
* 6ஆவது கட்டம்: பாஜக 31, காங்.6
* 7ஆவது கட்டம்: பாஜக 17, காங். 9.

News June 5, 2024

பங்குச்சந்தைகள் மீண்டும் உயர்கின்றன

image

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 450 புள்ளிகள் உயர்ந்து 22,337 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் நிச்சயமற்று இருந்ததால் நேற்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. அதனைத் தொடர்ந்து, இன்று பாஜக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதால் பங்குச்சந்தை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது.

News June 5, 2024

பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: சந்திரபாபு நாயுடு

image

டெல்லியில் நடைபெறும் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பாஜக, ஜன சேனா, தெ.தே.க ஆகியவை இணைந்து பணியாற்றியதால் தான் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், என்.டி.ஏ கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக் கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News June 5, 2024

நிதிஷ்குமார் என்ன செய்யவிருக்கிறார்?

image

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜகவுக்கு NDA கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. NDA அரசு மீண்டும் அமைய முக்கிய காரணமாக இருக்கப் போவதாக அவதானிக்கப்படும் சந்திரபாபுவுக்கு வாழ்த்து சொன்ன மோடி, மற்றொரு முக்கிய கூட்டாளியான நிதிஷ்குமாருக்கு மட்டும் இதுவரை வாழ்த்துக் கூறவில்லை. அதேபோல, நிதிஷும் மோடிக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனால், நிதிஷ் என்ன செய்யவிருக்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!