India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் & எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற TTV தினகரன், ஓபிஎஸ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், அன்புமணி, ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நரேந்திர மோடி வரும் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். இத்தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு NDA கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாமக, 6 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அத்துடன் தேர்தலில் 4.33 சதவீத வாக்குகளை மட்டுமே பாமக பெற்றது. இதனால் அக்கட்சியிடம் இருக்கும் மாம்பழ சின்னம் பறி போகும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு, தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் பதிலளிக்காமல் நழுவினார்.
ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்டவர் வி.கே.பாண்டியன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இவர் மாயமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தோல்விக்கும் அவர் தான் காரணம் என கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. பாண்டியன் எப்படி தேர்தல் பிரசாரத்திற்காக கட்சி செலவில் ஹெலிகாப்டரில் சுற்றி வந்தார் என்று அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ சவுமியா ரஞ்சன் பட்நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையை போல தமிழகத்திலுள்ள பிற மாவட்ட நகரங்களிலும் அரசால் மினி பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், அந்த பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டவை அல்ல, சென்னையில் ஏற்கெனவே ஓடிய பழைய பஸ்களே அவை என்றும், சென்னையில் 200 மினி பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், அதில் 140 மட்டுமே தற்போது ஓடுவதாகவும், எஞ்சியவை மாவட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் & எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் மோடி, நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 291 எம்.பி.க்களுடன் கலந்துரையாடி, சில முக்கிய முடிவுகளை மோடி எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமித் ஷாவுக்கு எதிராக அவதூறாக கருத்து வெளியிட்டதாக கர்நாடக பாஜக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் அனுப்பிய சம்மனை ஏற்று ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவருக்கு ஜாமின் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆத்தூரில் மருந்துக் கடையில் ஊசிப் போட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. மருத்துவக் கட்டமைப்பு வலுவாக இருக்கும் தமிழ்நாட்டில் மக்கள் ஏன் மருந்துக் கடைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. மருத்துவர் அல்லாத எவரிடமும் மருத்துவ ஆலோசனை பெறுவதையோ, சிகிச்சை பெறுவதையோ தவிர்க்குமாறு சுகாதாரத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முறைகேடு குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். முதலில் கேள்வித்தாள் கசிந்ததாகவும், தற்போது கூடுதல் மதிப்பெண் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று கூறினார். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பலர் தற்கொலை செய்திருப்பது கவலை அளிக்கிறது என்றும், இதுகுறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும், எதிராகவும் அதிமுகவுக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதாக வெளியான தகவல் உண்மைதானோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் 30 தொகுதிகளில் வென்றிருக்கலாம் என எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். இந்நிலையில்,
அதற்கு நேரெதிராக பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என செம்மலை கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.