news

News June 9, 2024

இன்று பிரதமராக பதவியேற்கும் மோடி

image

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக (240 எம்பிக்கள்) உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கான இலாக்காக்கள் நேற்று இறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 7.15 மணி அளவில், இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

News June 9, 2024

உகாண்டா அணிக்கு எதிராக WI பேட்டிங் தேர்வு

image

உகாண்டா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் போவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் பிராண்டன் கிங் விளையாடி வருகின்றனர். 2 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

News June 9, 2024

மோடி தோல்வியடைந்து விட்டார்: சோனியா

image

தன்னுடைய பெயரை மட்டுமே முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட மோடி, அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியடைந்துவிட்டார் என சோனியா காந்தி விமர்சித்துள்ளார். தேர்தல் முடிவுகளின் படி ஆட்சியமைக்கும் உரிமையை இழந்த அவர், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகாமல், இன்று மீண்டும் பிரதமராக உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்., தோல்வியடைந்த இடங்களில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

News June 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பிரதமராக மோடி இன்று பதவியேற்பு
➤ எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயக்கம்
➤ பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் – அமித் ஷா
➤ ஜூன் 12இல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு
➤ டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியுடன் இந்தியா இன்று மோதல்
➤ நடிகர் பிரேம்ஜி – இந்து ஜோடிக்கு இன்று திருத்தணியில் திருமணம்

News June 9, 2024

தமிழகத்தில் நாளை பள்ளி திறப்பு

image

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. எனினும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News June 9, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு…

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு வருபவர்கள் வைத்திருக்க வேண்டியவை:
1) நுழைவுச்சீட்டு (hall ticket).
2) கருமை நிற பந்துமுனை எழுதுகோல்.
3) அடையாள அட்டை (aadhaar/driving/driving licence/ passport/ voter id).
4) நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
5) தேர்வு முடிந்தவுடன் நுழைவுச் சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

News June 9, 2024

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

image

கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 6,000 காலிப் பணியிடங்களுக்காக, சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த குரூப் 4 தேர்வின் முடிவுகள் 2025 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 9, 2024

கூட்டணி ஆட்சியில் தேர்ச்சி பெறுவாரா மோடி?

image

நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராகவுள்ள மோடி, அதில் முழுமையான வெற்றி அடைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பதவியேற்புக்கு முன்பே அக்னிவீர் திட்டம் ரத்து, சிறப்பு அந்தஸ்து, நீட் விலக்கு என கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. கூட்டணி ஆட்சியும் மோடிக்கு புதிய அனுபவமாக இருக்கும் நிலையில், அதை சமாளித்து 5 வருட ஆட்சியை நிறைவு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

News June 9, 2024

நம்பிக்கையை ஏற்படுத்துமா தேசிய தேர்வு முகமை?

image

நீட் தேர்வு முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 67 மாணவர்கள் 720 மதிப்பெண் எடுத்தது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சந்தேகங்களை, கல்வியாளர்கள் எழுப்பி உள்ளார்கள். ஒரே மையத்தில் தேர்வெழுதிய 7 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சந்தேகங்களையும் தீர்த்து, நீட் பாதுகாப்பான தேர்வு என்பதை தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

News June 9, 2024

மீண்டும் வெற்றி கொடி நாட்டுமா அதிமுக?

image

தமிழக அரசியலில் பல வரலாற்று வெற்றிகளை குவித்த அதிமுக, தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் கூறினாலும், தொண்டர்களுக்கு அது மோதுமானதாக இல்லை என்பதை காண முடிகிறது. குறிப்பாக 7 இடங்களில் டெபாசிட் போனது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீண்டு, அதிமுக மீண்டும் வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!