India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இணையவாசிகளுக்கு படக்குழு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், படத்தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட எச்சரிக்கை நோட்டீஸை, தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளது. அதன்படி, டிரெய்லரின் எந்த ஒரு காட்சி, வீடியோக்களையும் பகிர்ந்தால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு திரும்பிய நிலையில், மே 31ஆம் தேதி கைதானார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து, சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். இன்றுடன் காவல் முடிவடையும் நிலையில், நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை ஜூன் 24 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 72 பேர் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற தகவல், இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, இலாகா விவரம் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
INDIA கூட்டணி 235க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், பெரும்பான்மை இல்லாத பாஜக அரசால் அவ்வளவு எளிதாக மசோதாவையும் நிறைவேற்றிவிட முடியாது. அதேபோல், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்பிக்களின் குரல் வலுவாக இருக்கும். இதை எல்லாம் சமாளிக்கும் வகையில் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் புலமை பெற்ற புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. டெல்லியில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், ராஜ்நாத், அமித்ஷா, நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டம், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்ற நாளில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரதமர் அலுவலகம் என்பது மோடிக்கானது அல்ல, மக்களின் அலுவலகமாக மாற வேண்டும் என பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் மோடி பேசியுள்ளார். பிரதமர் அலுவலக பணிக்குழுக்களுக்கு நேரக்கட்டுப்பாடோ, சிந்தனைக்கு எல்லையோ இல்லை என்ற அவர், வளர்ந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை அடைய அனைவரும் கடினமாக செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நாட்டை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது சகஜம் தான். ஆனால், பிரிந்து இருக்கும் அதிமுகவினர் ஒன்றிணையாவிட்டால், எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, அதிமுகவினர் இணைய வேண்டும் என ஓபிஎஸ் விடுத்த அழைப்பை ஏற்க, இபிஎஸ் மறுத்துவிட்டார். தற்போது, மீண்டும் இபிஎஸ்-க்கு, ஒபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கு மொத்தம் 2,49,918 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், அவகாசத்தை நீட்டிக்க மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 11) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
டி20 உலகக் கோப்பை போட்டியில் குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள பாக்., 4வது இடத்தில் உள்ளது. பாக்., சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல அடுத்த விளையாட உள்ள 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். அதே நேரம் 2வது இடத்தில் உள்ள அமெரிக்கா, அடுத்து ஆடும் போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.