news

News June 10, 2024

பிரதமர் அலுவலகம் மக்களுக்கானது: மோடி

image

2047இல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய 24 மணி நேரமும் உழைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்தது இல்லை என்றார். மேலும், 2014ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், பிரதமர் அலுவலகத்தை மக்களுக்கான அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும் அவர் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

News June 10, 2024

மத்திய அமைச்சரவை இலாகா விவரம் வெளியீடு

image

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே துறையின் இணை அமைச்சர் பதவி, ஹர்ஸ் மல்ஹோத்ரா மற்றும் அஜய் தம்தாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

‘ராயன்’ ரிலீஸ் தேதி வெளியானது

image

தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் ஜூலை 27ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ₹1000-க்கு விண்ணப்பிக்கலாம்

image

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ₹1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதன்பின், தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதில் தகுதிபெறும் குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ₹1000 வழங்கப்படும் எனத் தெரிகிறது.

News June 10, 2024

பாஜக வேட்பாளர் தோற்றதால் 2 பேர் தற்கொலை

image

தேர்தலில் தலைவர்கள் தோல்வியுற்றால் சில தொண்டர்கள் மொட்டை அடிப்பதாக சவால் விடுவார்கள். இதற்கு ஒருபடி மேலே சென்று, விரலை வெட்டிக் கொள்பவர்களும் உண்டு. ஆனால், மகாராஷ்டிராவின் பீட் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே தோல்வி அடைந்ததற்காக 2 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சரத்பவாரின் என்சிபி வேட்பாளர் பஜ்ரங் மனோகர் வெற்றி பெற்றுள்ளார்.

News June 10, 2024

கேள்விக்குறியாக மாறிய ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம்?

image

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியடைந்ததை அடுத்து, அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே, அவருக்கு வலது, இடது கைகளாக செயல்பட்ட ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகினர். இதனால், தற்போது தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ், “ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்ற கோரிக்கையை தீவிரமாக முன் வைக்க தொடங்கியிருக்கிறார்.

News June 10, 2024

பாஜக தேசிய தலைவர் ரேஸில் முக்கிய தலைவர்கள்

image

மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக நட்டா பதவியேற்றுள்ளார். இதனால், பாஜக தேசிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. இந்நிலையில், புதிய தலைவருக்கான பட்டியலில் ஸ்மிருதி இரானி, அனுராக் தாகூர், வினோத் தவ்டே, கே லக்‌ஷ்மண், சுனில் பன்சால் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 10, 2024

பலத்த காற்றுடன் வெளுக்கும் கனமழை

image

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அரைமணி நேரமாக பெய்து வரும் மழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இரவு 10 மணி வரை சென்னை, காஞ்சி, சேலம், வேலூர், தி.மலை, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

பிஹார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 14ஆம் தேதி தொடங்கும் எனவும், பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் சலுகைகள்

image

*அடிப்படை ஊதியம் & அலுவலக அலவன்ஸ் உள்பட மாதம் ₹1.60 லட்சம். * தொலைபேசிக்கு ஆண்டுக்கு ₹1.5 லட்சம். * வருடத்திற்கு 34 இலவச விமான டிக்கெட்டுகள். * ரயில்களில் தடையற்ற முதல் ஏசி வகுப்பு பயணம். * இலவச வீடு. * ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம். * நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது டிஏ ₹2000. * இலவச CGHS சிகிச்சை. * முன்னாள் MPகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம்

error: Content is protected !!