India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோடி அமைச்சரவையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு மத்திய அமைச்சர், ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பாஜக-TDP கூட்டணி மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், ஸ்ரீகாகுளம் தொகுதியில் வெற்றி பெற்ற ராம் மோகன் நாயுடு விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், குண்டூர் தொகுதியில் வென்ற சந்திரசேகர் பெம்மாசானி தொலைத்தொடர்பு, ஊரக வளர்ச்சி இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நாளை (ஜூன்11) முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியல் வியாட் தனது நீண்ட நாள் காதலி ஜார்ஜி ஹாட்ஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த ஜோடிக்கு இந்திய மகளிர் அணியினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இங்கி., மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஸ்கீவர் மற்றும் கேத்தரின் ப்ரண்ட் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையின் பிரபல இயக்குநர் திருச்செல்வத்தின் மகள் பிரியவர்ஷினியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில், இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில், ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக, திருச்செல்வம் இயக்கி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர், சமீபத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, திமுக, அதிமுக நேரடியாக களமிறங்குவதாக அறிவித்துள்ளன. இதில், திமுக சார்பில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா மற்றும் மறைந்த MLA புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரவில் தூங்கச் செல்லும் முன்பாக புகைப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்காக அமையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரம் காஃபி குடித்துவிட்டு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர். மேலும், சிலர் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் ஆகியவற்றை இரவில் உண்பதுண்டு. இரவில் தூங்கச் செல்லும் முன் வாழை, கொய்யா தவிர்த்து பிற பழங்களை தவிர்க்க வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*கனிமொழி – நாடாளுமன்ற குழுத் தலைவர்
*டி.ஆர்.பாலு – மக்களவை குழுத் தலைவர்
*தயாநிதி மாறன் – மக்களவை குழு துணைத் தலைவர்
*ஆ.ராசா – மக்களவை கொறடா
*திருச்சி சிவா – மாநிலங்களவை குழுத் தலைவர்
*மு.சண்முகம் – மாநிலங்களவை குழு துணைத் தலைவர்
*பி.வில்சன் – மாநிலங்களவை கொறடா
*ஜெகத்ரட்சகன் – மக்களவை, மாநிலங்களவை பொருளாளர்
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம், இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம், கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திர பயன்பாடு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். தற்போது மோடி 3.0விலும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக தொடர்வதால் இந்த அறிவிப்புகள் வேகம் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி பிரச்னை இன்னும் தீராத நிலையில், அந்தப் பிரச்னையைக் கையாளும் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகாவின் சோமன்னாவை இணையமைச்சராக மோடி அரசு நியமித்தது சர்ச்சையாக மாறியுள்ளது. முழு அதிகாரம் இல்லாத இணையமைச்சர் பதவிதான் என்றாலும், காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைந்தபட்ச ஆதிக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளதால், உடனடியாக அவரது இலாகாவை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு வரி பகிர்வாக ₹5,700.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ₹1.39 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதிகபட்சமாக உ.பி., மாநிலத்திற்கு ₹25,069.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிஹாருக்கு ₹14,056 மத்திய பிரதேசத்திற்கு ₹10,970 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.