news

News June 11, 2024

அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான்

image

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக தோல்வியை சந்தித்திருக்காது என மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கின்றன என்றும், அதிமுக அதனை செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சாடியுள்ளார். மதுரை ஆதீனம் முன்பு அதிமுகவுடன் நெருக்கமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 11, 2024

ப்ளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ப்ளஸ் 1 மாணவர்கள் முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ₹10000 வீதம் இளநிலை படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் <>https://www.dge.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அத்துடன் தலைமை ஆசிரியரிடம் ₹50 செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

News June 11, 2024

இ-கார்கள் பதிவில் பெங்களூரு முதலிடம்

image

இந்தியாவில் இ-கார்கள் அதிகம் பதிவுசெய்யப்பட்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் முக்கிய தொழில் நகரங்களான மும்பை, டெல்லியை பின்னுக்குத் தள்ளிய பெங்களூருவில், கடந்த ஆண்டில் 8,690 இ-கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 40,000க்கும் அதிகமான இ-கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 8,211, ஹைதராபாத்தில் 6,408 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

News June 11, 2024

ஆதீனத்தின் முன்னாள் உதவியாளர் கைது

image

தருமபுரம் ஆதீனத்திடம் இருந்து பணம் பறித்த வழக்கில் அவரது முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வாரணாசியில் போலீசார் அவரைக் கைது செய்தனர். தருமபுரம் மடாதிபதி தொடர்பான ஆபாச வீடியோக்கள் இருக்கிறது என்றும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றும் மிரட்டிய வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News June 11, 2024

போலீசார் முதலில் அணிந்த உடையின் நிறம் தெரியுமா?

image

ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆரம்பத்தில் இந்தியாவில் காவல்துறையினர் வெள்ளை நிற உடையே அணிந்தனர். அப்போது, பணியின்போது ஏற்படும் அழுக்கால் உடை அசுத்தமாகி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அதை காக்கியாக மாற்ற ஆங்கிலேய அரசின் வடமேற்கு படைப்பிரிவு கவர்னரின் ஏஜெண்ட் ஹென்றி லாரன்ஸ் பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, 1847 முதல் போலீசாரின் உடை காக்கி நிறமாக மாற்றப்பட்டது.

News June 11, 2024

கிளாப்பராக பணிபுரிந்து கதாநாயகனாக உயர்ந்த நடிகர்

image

ஈகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நானி, தெலுங்கில் ஒரு படத்துக்கு ₹22 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆரம்பத்தில் அவர், ₹2,500 ஊதியம் வாங்கியதாகவும், அதுவும் அந்த காசோலை பணமின்றி திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார். உதவி இயக்குநராகவும், கிளாப்பராகவும் பணியாற்றிய காலத்தில் இயக்குநர் ஒருவர், அனைவர் முன்னிலையிலும் நீ ஒருபோதும் இயக்குநராக முடியாது எனக் கூறி அவமதித்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்?

image

டி20 WC கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி கனடாவை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே நடைபெற்ற 2 லீக் போட்டியிலும் தோல்வியடைந்த பாக்., புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்கும் பட்சத்தில் அந்த அணி ‘சூப்பர் 8’ செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும். இந்தியா, அமெரிக்கா தலா 2 வெற்றிகளுடன் பட்டியலில் முதல் 2 இடங்களிலும், கனடா ஒரு வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளது

News June 11, 2024

மனைவியை விவாகரத்து செய்யும் ராஜ்குமார் பேரன்

image

கன்னட சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார், சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக உள்ளார். இவருக்கும் மைசூருவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் 2019இல் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது இருவரும் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

News June 11, 2024

உலகக் கோப்பை: ஐசிசிக்கு ₹6,000 கோடி வருவாய்

image

இந்தியாவில் 2023இல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்றது. இதற்கான டிக்கெட் வருவாய், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐசிசிக்கு ₹6,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் 2019இல் நடைபெற்ற உலகக் கோப்பை மூலம் ₹4,650 கோடி கிடைத்த நிலையில், அதை விட 2023இல் சுமார் ₹1,500 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் ஐசிசிக்கு கிடைத்த மிகப்பெரிய வருவாய் ஆகும்.

News June 11, 2024

பாகிஸ்தானுக்கு என்ன பதிலடி கொடுக்க போகிறது இந்தியா?

image

காஷ்மீரின் ரியாஸி பகுதியில் பாக்., தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 10 யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர். உரி, புல்வாமாவில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக உரியில் துல்லியத் தாக்குதல், பாலாகோட்டில் விமானப்படை தாக்குதலை இந்தியா நடத்தியது. இந்நிலையில், மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளில், நடந்த இத்தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுக்க போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!