India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 9ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in-இல் தனித்தேர்வர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய கர்நாடக காங்., மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் தங்களுக்கான எச்சரிக்கை மணி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். விரைவில் தங்களை சரி செய்துகொள்ள இத்தேர்தல் சரிவு உதவும் எனக் கூறிய அவர், உட்கட்சி பூசலை தவிர்க்குமாறு மூத்த தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று விமானம் மாயமான நிலையில், தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், விமான விபத்தில் சவ்லோஸ் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்து விட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இனி ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார். இது பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம், மாணவர்களின் உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளினால் உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், நடிகர் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீடு மூலம் அரசு மருத்துவமனைகளில் ₹5 லட்சம் முதல் சில நோய்களுக்கு ₹10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கும்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை அமெரிக்காவை, இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்வுப்பூர்வமானது என கூறியுள்ளார் அமெரிக்க அணியின் பந்துவீச்சாளர் நேத்ராவால்கர். மேலும் இந்திய வீரர்களை நன்கு அறிவேன் எனவும், சூர்யகுமார் யாதவுடன் இணைந்து மும்பை அணிக்காக விளையாடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைக்காததால் இவர் அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, உ.பி. மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தொலைக்காட்சியில் இதுபோன்ற செய்திகளை பார்த்த போது, இந்த யோசனை தோன்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகளால் தன்னை கண்டுபிடிக்க முடிகிறதா? என்பதை சோதிக்க விளையாட்டாக இவ்வாறு செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி, சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை பிரபு சாலமன் இயக்கவுள்ளார். இதில், ஸ்பெஷல் என்னவென்றால், பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி, இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ப்ரீபுரொடெக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விஜய் ஸ்ரீஹரி வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சிகள் எடுத்துள்ளார். இப்படத்தில் சிங்கம் முக்கிய காட்சிகளில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம்; பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு காங்., தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை அறைகூவல் விடுத்துள்ளார். காங்., தனித்து போட்டியிடுவது குற்றமல்ல என்ற அவர், இதற்குமுன்பு தனித்து போட்டியிட்டு 20% வாக்குகளை பெற்றதாக தெரிவித்தார். அவரின் பேச்சு மூலம் திமுக கூட்டணியில் இருந்து காங்., விலகுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.