India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெற்றிபெற்றார். பிறகு, அந்த கூட்டணியை விட்டு விலகி, பாஜக கூட்டணியில் இணைந்து, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால், திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்தால் எம்பியாகி இருக்கலாமோ என்று கட்சியினருடன் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், விஜய்சேதுபதியுடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜான்வி, ‘நானும் ரவுடிதான்’ படத்தை 100 முறை பார்த்ததாகவும், அதன் பிறகு விஜய்சேதுபதியின் ரசிகை ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு ஃபோன் செய்து, உங்களுடன் நடிக்க விருப்பமாக உள்ளது என கூறியபோது, அவர் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2024-25 பட்ஜெட்டின் போது அறிவித்து இருந்தது. மக்களவை தேர்தல் பரப்புரையின் போதும், இந்த வாக்குறுதியை ஆம் ஆத்மி அளித்தது. இந்த நிலையில், தேர்தல் முடிந்து விட்டதால் அறிவித்த படி, மாதந்தோறும் ரூ.1,000 வழங்க கோரி, டெல்லியில் பாஜக பெண் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு ஏமன் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அப்பாவி குழந்தைகள் முதல் முதியோர் என 49 பேர் உயிரிழந்த நிலையில், 140க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இருக்கலாம் என்றும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது.
தேர்தல் பரப்புரையின் போது NCP நிறுவனர் சரத் பவாரை, ‘அங்கும் இங்கும் அலைந்து திரியும் ஆன்மா’ என பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவின் அஹல்யா நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய சரத் பவார், ‘இந்த ஆன்மா மக்களை விட்டு ஒருபோதும் பிரியாது’ எனவும், ‘மக்களின் குறைகளுக்காக மட்டுமே இந்த ஆன்மா அலைந்து திரியும்’ எனவும், ‘ஒருபோதும் அதில் தன்னலம் இருக்காது’ எனவும் கூறியுள்ளார்.
ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுமார் 3 லட்சம் செமிகண்டக்டர் வல்லுநர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என TeamLease Degree Apprenticeship என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செமிகண்டெக்டர் மார்க்கெட் வளர்ச்சிக்கு உதவ, இத்துறைக்கு மத்திய அரசு ₹76,000 கோடி ஊக்கத்தொகை அளித்துள்ளது. மேலும், 300 முன்னணி கல்வி நிறுவனங்களில் புதிதாக செமிகண்டெக்டர் Course அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு ‘மிர்சாபூர்’ பாலிவுட் இணையத் தொடரின் முதல் சீசன் வெளியானது. ஆக்சன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான முதல் சீசனின் 9 எபிசோடுகளும் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, 2ஆவது சீசன் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி, அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், மிர்சாபூர் தொடரின் 3ஆவது சீசன் அமேசான் பிரைமில் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் வாரிசுகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். குமாரசாமி, ராம்நாத் தாகூர், கிரண் ரிஜிஜூ, நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்ட பலரது பெயரைக் குறிப்பிட்டு போராட்டம், சேவை, தியாகம்தான் எங்கள் மரபு எனக் கூறுவோர், வாரிசுகளுக்கு பதவி கொடுத்துள்ளனர் என சாடியுள்ளார். மேலும், பாஜகவினரின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.