India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சில உணவுகளை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடும் போது, அனைத்து சத்துக்களையும் முழுவதுமாக பெற முடியும். நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். ஓட்ஸை ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள ஃபைடிக் அமிலம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. உலர் திராட்சை, ஆளி விதைகளையும் ஊற வைத்து சாப்பிடலாம்.
‘நீட்’ தேர்வை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியாவை வல்லரசாக மாற்ற மோடி நடவடிக்கை எடுப்பார் என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூன்- 12 | வைகாசி- 30
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 04:30 PM – 05:30 PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 PM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶ திதி : ஷஷ்டி
1991இல் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. அதனை தொடர்ந்து 1996, 1997, 1998 மற்றும் 1999இல் முறையே தேவகவுடா, ஐ.கே.குஜரால், இரண்டு முறை வாஜ்பாய் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2004 மற்றும் 2014இல் கூட்டணி அரசை மன்மோகன் சிங் நடத்திய நிலையில், 2014 முதல் 2024வரை பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மோடி தற்போது கூட்டணி அரசை வழிநடத்த உள்ளார்.
இந்திராவின் மரணத்துக்கு பிறகு 1984இல் ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து 1989இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் வி.பி சிங் தலைமையிலான ஜனதா தள அரசு கூட்டணி அரசை அமைத்தது. அந்த அரசும் 1990இல் கலைக்கப்படவே, சமாஜ்வாடி ஜனதா கட்சியை சேர்ந்த சந்திர சேகர் சில மாதங்கள் பிரதமராக இருந்தார்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி முதல் முறையாக இந்தியாவில் கூட்டணி அரசை அமைத்தது. 2 ஆண்டுகளில் கூட்டணி அரசில் பிரச்னைகள் எழ, சரண் சிங் சில மாதங்கள் பிரதமராக இருந்தார். அதை தொடர்ந்து 1980 தேர்தலில் மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் இந்திரா காந்தி ஆட்சியை பிடித்தார்.
நாடு முன்னேற பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் நிரூபித்துள்ளதாக தெரிவித்த அவர், உலகில் மிகப்பெரிய ஜனநாயகம் இந்திய தேசம் தான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் (30 அரைசதம் – 118 இன்னிங்ஸ்) சாதனையை ரிஸ்வான் (30 அரைசதம் – 71 இன்னிங்ஸ்) சமன் செய்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 28 அரை சதத்துடன் இந்தப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அரசை விமர்சித்த முன்னாள் பிஷப்பை கேரள முதல்வர் பினராய் விஜயன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளார்கள் என்பதை பினராய் உணர்ந்து செயலாற்றுமாறு முன்னாள் பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பினராயி, பிஷப்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என கூறியிருந்தார். எம்.பி தேர்தலில் மொத்தமுள்ள 20 இடங்களில் 19 இடத்தில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது.
➤ தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்
➤ நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது.
➤ சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை.
➤ நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது.
➤ நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும்
Sorry, no posts matched your criteria.