India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 182 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Technician, Operator பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI, Diploma.வயது வரம்பு: 18-28. தேர்வு: எழுத்துத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு. ஊதியம்: ₹44,554 – ₹46,511 /-. கூடுதல் தகவல்களுக்கு <
தமிழக பாஜகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் தொடர்பாக மேலிடம் அறிக்கை கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணியமைத்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று தமிழிசை பேசியிருந்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்நிலையில், நிலைக்குழு உறுப்பினர்களான வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டிருக்கிறாராம்.
நெல்லை வரகுண பாண்டீஸ்வரர் கோயிலின் 3,000 ஏக்கர் நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனில், தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் முக்கிய பிரச்னை, முறையான அறிக்கையை அரசு தாக்கல் செய்வது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5ஆவது வீரராக களமிறங்கிய துபே, 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் ஆரம்பத்தில் அதிரடியில் கலக்கியதாலேயே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் எதிர்பார்ப்போடு இடமளிக்கப்பட்டது. அதை அவர் பூர்த்தி செய்ய வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராக அமித் ஷா நேற்று பொறுப்பேற்றார். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், மோடி தலைமையில் 3ஆவது முறையாக அமைந்துள்ள மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும், தீவிரவாதம், நக்சல்வாதம் ஆகியவற்றுக்கு எதிரான அரணாக நாடு மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது லீக் போட்டியில், AUS அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி, 17 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. 73 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய AUS அணி அதிரடியாக ஆடி, 5.4 ஓவர்களில் 74 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு 2 ஆவது அணியாக முன்னேறியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், லொகேஷன் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. அதிரடி சண்டை கதையம்சத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று பொறுப்பேற்றார். இதையடுத்து பேசிய அவர், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்தும் திட்டம் மத்திய பாஜக அரசிடம் உள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசில் சேர்ந்துள்ள டிடிபி, ஜேடியு கட்சிகள் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை கைவிட பாஜக முடிவு செய்திருப்பதாக கூறியிருந்த நிலையில் மேக்வால் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுங்கக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல ₹2இல் இருந்து ₹110 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக, மாதத்தின் முதல் நாளில்தான் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும். ஆனால், இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கவாஸகி நிறுவனம், நின்ஜா ZX 4 RR என்ற புதிய பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 399 சி.சி. திறன் Ninja ZX 4 RR லிக்விட் கூல்டு என்ஜின், டிரெலிஸ் பிரேம், மோனோ ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக், ஸ்மார்ட்போன் இணைப்பு & டிராக்ஷன் கண்ட்ரோல் வசதிகளைக் கொண்ட இதன் விலை ₹9.10 லட்மாகும். இதில், 3 விதமான ஓட்டும் நிலைகள் (ஸ்போர்ட், சாலை, மழை) உள்ளன.
Sorry, no posts matched your criteria.