India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் சற்றுமுன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 6 பேர் காயமடைந்துள்ளனர். தோதா பகுதியில் நடைபெற்ற இத்தாக்குதல், கடந்த 3 நாட்களில் ஜம்முவில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் ஆகும். ஏற்கெனவே கத்துவா மற்றும் ரியாசி பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அரசியல் ரீதியில் பூஜ்ஜியம் என அக்கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், நடிகருமான எஸ்.வி. சேகர் விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழக பாஜகவில் கிரிமினல்கள், ரவுடிகளுக்கு பொறுப்பு வழங்கி அண்ணாமலை அழகு பார்த்ததாகவும், பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கட்சியில் உச்சத்துக்கு சென்று விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பேரனும் நடிகருமான யுவராஜும், அவரது மனைவி ஸ்ரீதேவியும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் ஸ்ரீதேவி, யுவராஜுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசில், நடிகை ஒருவருடன் யுவராஜுக்கு இருக்கும் தொடர்பை தெரிந்து கொண்டதால், மனரீதியில் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மனைவி ஸ்ரீதேவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள கன்னட நடிகர் யுவராஜ், அவர் மீது பல குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தனது அகாடமி வங்கிக் கணக்கில் இருந்து ரகசியமாக ₹3 கோடி எடுத்துக் கொண்டதாகவும், அகாடமி நிதியை கொண்டு 20க்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கி உள்ளதாகவும், நண்பர் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்துள்ளதாகவும், அமெரிக்காவுக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று ₹53,160க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,440க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,645ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹35 உயர்ந்து ₹6,680ஆக விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ₹98.80க்கு விற்பனையாகிறது.
மனிதர்கள் மூலம் கழிவுநீரை அகற்றினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் எச்சரித்துள்ளார். தூய்மைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், “தனிநபர், ஒப்பந்ததாரர்கள் அல்லது நிறுவனங்கள் எந்தவொரு நபரையும் உரிய அனுமதி & பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது” என்றார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இதில், அமெரிக்க வீரர்கள் சவுரப் நெட்ரவால்கர், மும்பை அணிக்காக முன்பு சூரியகுமார் யாதவுடன் விளையாடியவர். இதேபோல், ரஞ்சிக்கோப்பையில் டெல்லிக்காக 2011இல் சதம் விளாசிய மிலிந்த் குமார், சோனட் கிளப்புக்காக பண்ட் இளம் வயதில் விளையாடுகையில், நெருங்கிப் பழகியவர். ஆதலால், இன்று நண்பர்கள் 4 பேரும் பரஸ்பரம் எதிர்த்து விளையாடுகின்றனர்.
கர்நாடகாவில் ‘ஹமாரே பாரா’ திரைப்படத்தை வெளியிட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. குரான் & முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இப்படத்திற்கு தடைவிதிக்கவும் கோரி இருந்தன. அதனை பரிசீலித்த அம்மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964இன் கீழ் ‘ஹமாரே பாரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட பாமக, அமமுக என இரு கட்சிகளும் வாய்ப்பு கேட்பதால் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்மூன்று கட்சிகளும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டன. ஆனால், இடைத் தேர்தலில் ஒரு கட்சி மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் அதிகாரப் போட்டி எழுந்துள்ளது. பாஜகவும் விக்கிரவாண்டியில் வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.