India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா? என, பிரதமர் மோடிக்கு காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் பிரச்னைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவரை, பிரதமர் செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு காங், அழுத்தம் தரத் தொடங்கியுள்ளது.
ஆதாரில் உள்ள தகவல்களை இலவசமாக திருத்தம் செய்யவும், புதுப்பிக்கவும் வரும் 14ஆம் தேதி வரை UIDAI அமைப்பு கால அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் 2 நாள்களே உள்ளன. அதன்பிறகு ஆதாரில் தகவல்களை புதுப்பிக்கவோ, திருத்தம் செய்யவோ கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். ஆதலால் இந்த இலவச சேவையை பயன்படுத்தி பயனடையும்படி நாட்டு மக்களை, UIDAI அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதை தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி தனுஷின் ‘ராயன்’ வெளியாகவுள்ளது. இதனால், ஜூலை மாத வெளியீடு என அறிவிக்கப்பட்ட அருண் விஜய்யின் ‘வணங்கான்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு பெரிய படங்களுக்கு மத்தியில் ‘வணங்கான்’ படக்குழு ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மோகன் சரண் மஜி, ஒடிஷாவின் முதல்வராவார் என, தாங்கள் யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை என மோகன் மஜியின் மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அமைச்சரவையில் கணவருக்கு இடம் கிடைக்கும் என நினைத்து கொண்டிருந்ததாகவும், ஆனால், முதல்வராக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்ததாகவும் கூறியுள்ளார். ஒடிஷா மக்களின் தேவைகளை அவர் நிச்சயம் பூர்த்தி செய்வார் எனவும் உறுதியளித்துள்ளார்.
இயந்திரமயமான இந்த காலத்தில் மனிதர்கள், புதுப்புது நோய்களால் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. பெரும்பாலான இந்த நோய்களுக்கு மன அழுத்தமே காரணமாகும். இதற்கான மருந்து நம்மிடமே உள்ளது. ஆம், சிரிப்புதான் அந்த மருந்து. நகைச்சுவையில் வாய் விட்டு சிரித்தாலே போதும். அதனால் உடலில் ஏற்படும் மகிழ்ச்சியான உணர்வு, மன அழுத்தத்தை போக்கி நோய்களில் இருந்து விடுபட உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் மோடி தனது தலைமையிலான 72 பேர் கொண்ட அமைச்சரவையில் முஸ்லீம்களுக்கு ஒரு இடம் கூட வழங்காததற்கு ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி 3.0 அமைச்சரவையில் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை பாஜக வெளிப்படையாக எடுத்துரைத்துவிட்டதாகக் கூறிய அவர், இதனை மதவாதம் & வெறுப்பு அரசியலின் அறிகுறியாக தான் கருதுவதாக விமர்சித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, ஜூன் 14 முதல் 18 வரை, தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததையடுத்து மீண்டும் கட்சி மீது சசிகலா தன் பார்வையை திருப்பியுள்ளார். அதிமுக ஒன்றுபட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்ட கையோடு, சில நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அவரின் அழைப்பிற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, தொண்டர்களை நேரில் சந்திக்கும் நோக்கில், ஜூலையில் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி செல்ஃபோன் சேவை குறித்து அடிக்கடி கேள்விப்படுவோம். அப்படி என்றால் என்ன? ஜி என்ற எழுத்து தமிழில் தலைமுறை என பொருள்படும் Generation என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள முதல் எழுத்தாகும். அந்த G எழுத்தை சேர்த்து, செல்ஃபோன் இணையதள வேகத்திற்கேற்ப, அலைவரிசை தரம் பிரிக்கப்பட்டுள்ளது. 2ஜி சேவை 384 கேபிபிஎஸ் வரையிலும், 3ஜி 3 எம்பிபிஎஸ், 4ஜி 1 ஜிபிபிஎஸ், 5ஜி 20 ஜிபிபிஎஸ் வரை வேகம் இருக்கும்.
நடிகர் சரத்குமாரின் மூத்த மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கும், நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அவர்களது திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தாய்லாந்தில் ஜூலை 2ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும், உறவினர்களை சொந்த செலவில் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.