news

News June 12, 2024

SBI-யில் 150 காலிப் பணியிடங்கள்

image

பொதுத்துறை வங்கியான SBI-யில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 150 இடங்களுக்கு ஜூன் 27 வரை sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலுக்கு தனி மதிப்பெண் உண்டு. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் பணிபுரிய வேண்டும்.

News June 12, 2024

RSS தலைவர் கவலை: மணிப்பூர் செல்வாரா பிரதமர்?

image

ஓராண்டுக்கு மேலாகியும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை என, கடந்த திங்களன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜகவின் தாய் அமைப்பின் கவலையை உணர்ந்து, பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA அரசு எவ்வளவு நாள்கள் நீடிக்கும் என்பதை விட, நாட்டின் எதிர்காலத்தை குறித்தே தனது எண்ணம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News June 12, 2024

எந்தெந்த காய்கறிகள் எவ்வளவு விலை

image

இன்று உழவர்சந்தைகளில் சில காய்கறிகளின் விலை உயர்ந்தும், சில காய்கறிகளின் விலை குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பீன்ஸ் ₹180லிருந்து ₹165ஆகவும், பெரிய வெங்காயம் ₹80லிருந்து ₹55ஆகவும், இஞ்சி ₹320லிருந்து ₹220ஆகவும் குறைந்துள்ளது. பீட்ரூட் ₹50லிருந்து ₹82ஆகவும், முட்டைகோஸ் ₹60லிருந்து ₹65ஆகவும், கேரட் ₹90லிருந்து ₹115ஆகவும், தக்காளி ₹76லிருந்து ₹80ஆகவும் உயர்ந்துள்ளது.

News June 12, 2024

Paris Olympics: இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிப்பு

image

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் 15 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தகுதி சுற்றில், சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வாலறிவன், ரமிதா, சந்தீப் சிங், அர்ஜூன் பாபுதா, இஷாசிங், சரப்ஜோத் உள்ளிட்ட 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒலிம்பிக்கான இந்திய ஷாட்கன் அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

சந்திரபாபு நாயுடுக்கு ஸ்டாலின் வாழ்த்து

image

ஆந்திர முதல்வராக 4ஆவது முறையாக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கள் தலைமை, மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும் என, வாழ்த்தியுள்ளார். மேலும், ஆந்திரா, தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News June 12, 2024

விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் உருக்கமாக இரங்கல்

image

சேலம் மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

News June 12, 2024

அஜித் படத்தில் இணைந்த ‘Blast மோகன்’

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சுனில், குட் பேட் அக்லி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 12, 2024

214 பணியிடங்கள்: Apply Now

image

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Cotton Corporation of India Ltd (CCI) நிறுவனத்தில் காலியாகவுள்ள 214 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதி: B.Sc in Agriculture, http://B.Com, MBA, CA/CMA மற்றும் Post Graduate.தகுதியானவர்கள் இன்று முதல் 02.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்யவும்.

News June 12, 2024

திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா காங்கிரஸ்?

image

எத்தனை நாள்களுக்கு திமுகவை சார்ந்திப்பது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருந்தது விவாதப்பொருளானது. இது குறித்து பிபிசி செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கமில்லை என கூறினார்.

News June 12, 2024

நிர்மலா 2.0: சென்செக்ஸ் இலக்கு ஒரு லட்சம்!

image

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் 3ஆவது முறையாக பொறுப்பேற்றதை அடுத்து, வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மே 31, 2019 அன்று அவர் முதல்முறையாக நிதியமைச்சராக பதவியேற்றபோது 39,700 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், தற்போது 77 ஆயிரத்தை எட்டும் நிலையில் உள்ளது. இந்த பின்னணியில், FY28-க்குள் சந்தை வளர்ச்சிப் பெற்று, ஒரு லட்சம் புள்ளிகளை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

error: Content is protected !!