India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதை போல குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில், நமீபியா மற்றும் ஓமன் அணிகள் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளன.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
விளக்கம்: நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீசினார். இந்த ஆட்டத்தில் அவர் 4 ஓவர்களில் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெரிக்காவுக்கு எதிரான அர்ஷ்தீப் சிங்கின் இந்த பந்துவீச்சு டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இரண்டாவது இடத்தில் அஸ்வின் உள்ளார். அவர் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை 2014இல் வீழ்த்தினார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தங்கலான்’. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி , பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் சுரங்கம் பின்னணியில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வை மையமாக வைத்து உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், புகைப்படம் ஒன்றை, நடிகர் விக்ரம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்று (ஜூன் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பயங்கரவாதிகளை அழிப்பதை விட எதிர்க்கட்சிகளை ஒழிப்பதில் அமித் ஷா மும்முரமாக இருப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். . ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தீவிரவாத தாக்குதலால் அப்பாவிகள் தொடர்ந்து பலியாகி வருவதாக தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்தை பற்றி பாஜக தலைவர்கள் எப்போதும் கவலைபடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இன்று (ஜூன் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்
➤ குவைத் தீவிபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
➤ ஒடிஷா முதல்வராக மோகன் சரண் மஜி பதவியேற்பு
➤ சென்னையில் பல இடங்களில் மிதமான மழை
➤ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
➤ தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் புகார்
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 12 மாதங்களில் இல்லாத அளவில் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 4.83%ஆக இருந்த சில்லரை பணவீக்கம், மே மாதத்தில் 4.75%ஆக குறைந்துள்ளது. இறைச்சி, மீன் ஆகியவற்றின் பணவீக்கம் 8.2%இல் இருந்து 7.3%ஆக குறைந்துள்ளது. முட்டையின் பணவீக்கம் 7.6%இல் இருந்து 7.1%ஆகவும், பால் பொருட்களின் பணவீக்கம் 3%இல் இருந்து 2.6%ஆகவும், உடைகளின் பணவீக்கம் 2.9%இல் இருந்து 2.7%ஆகவும் குறைந்துள்ளது.
அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் என்.ஆர்.குமார் 27 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 3 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 50 ரன்களும், ஷிவம் துபே 31 ரன்களும் எடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.