news

News June 13, 2024

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இரவு 10 மணியளவில் பெய்ய தொடங்கிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாது நீடித்தது. அத்துடன், பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News June 13, 2024

அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு இன்று பதவியேற்பு

image

அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் 46இல் பாஜக வென்றது. இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக மீண்டும் பெமா காண்டு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெமா காண்டு தொடர்ந்து 3ஆவது முறையாக இன்று காலை பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது.

News June 13, 2024

கடன் தொல்லைகள் அகல…

image

சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, அவரை 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். துளசி சாற்றி அவரை வழிபடுவது மிக்க நல்லது. இதனால், கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். இதை போல, தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபட்டால் நிச்சயம் கடன் தொல்லை அகன்று, இல்லறத்தில் இனிமை உண்டாகும்.

News June 13, 2024

கட்டாய வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து, ஓமன் அணியுடன் மோத உள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, தற்போது வரை 2 ஆட்டங்களில் ஆடி (1 ஆட்டம் மழையால் ரத்து, 1 ஆட்டம் தோல்வி) 1 புள்ளியுடன் பி பிரிவில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதையடுத்து எஞ்சிய இரு லீக் போட்டியில் வென்றால் மட்டும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். ஓமன் அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

News June 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ குவைத் தீவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலி
➤ ஆந்திர அமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்பு
➤ இபிஎஸ் உடன் இணைய முடியாது: டிடிவி தினகரன்
➤ சென்னையில் பல இடங்களில் மிதமான மழை
➤ அண்ணாமலை ஒரு பூஜ்ஜியம்: எஸ்.வி.சேகர்
➤ அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி

News June 13, 2024

மணல் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

image

வீட்டில் மணல் லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். உ.பி மாநிலம் கான்பூரில் இருந்து மணல் லாரி ஹர்தோய் நோக்கி சென்று கொண்டிருந்தது. உன்னாவ் சாலையில் உள்ள சுங்கக் சாவடிக்கு அருகில் இந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைக்கு அருகில் இருந்த குடிசை மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

News June 13, 2024

நியூசி., எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வென்றுள்ளது. ஆனால், நியூசிலாந்து, 1 போட்டியில் மட்டுமே இதுவரை விளையாடி நிலையில், அந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் வென்றால் சூப்பர் 8 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

சட்டசபை கூட்டத்தொடரை 9 நாட்கள் நடத்த அதிமுக எதிர்ப்பு

image

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை 9 நாட்கள் நடத்துவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டசபையை கூட்டுவது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. 9 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க அதிமுக உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.

News June 13, 2024

மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ்

image

டி20 உலகக் கோப்பையில் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தவர்களில் பட்டியலில் சூர்யகுமார் இணைந்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக ஆட்டத்தில் 49 பந்துகளை சந்தித்து அவர் அரைசதம் எடுத்தார்.
ரிஸ்வான் (பாக்.,) – 52 பந்துகள்
டேவிட் மில்லர் (தென்னாப்ரிக்கா) – 50 பந்துகள்
டெவன் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) – 49 பந்துகள்
டேவிட் ஹஸ்ஸி (ஆஸி.,) – 49 பந்துகள்
சூர்யகுமார் யாதவ் (இந்தியா) – 49 பந்துகள்

News June 13, 2024

ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

image

சுவாதி மாலிவால் வழக்கில் கைதான பிபவ் குமார் ஜாமின் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் மே 13ஆம் தேதி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் பிபவ் குமார் கைதான அவர், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது.

error: Content is protected !!