news

News June 13, 2024

இடைத்தேர்தலில் தனித்து போட்டி?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அந்த தொகுதியின் நிலவரம் குறித்து கள ஆய்வு நடத்த நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாமகவும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. பாஜகவும் அங்கு போட்டியிடுவதில் ஆர்வம் காட்டுகிறது.

News June 13, 2024

செல்போன் எண்ணுக்கு இனி கட்டணம்: டிராய் பரிந்துரை

image

ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் செல்போன், தரைவழி தொலைபேசி எண்ணுக்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பேன்சி எண் தவிர்த்த எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சேவைக் கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. இந்நிலையில், செல்போன் எண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கவும், பயன்படுத்தாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

News June 13, 2024

20 நிமிடத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது

image

இந்த ஆண்டு ஆயுத பூஜை அக்.11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி, 3 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் அக்.10ஆம் தேதி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களில் முடிந்தது. இணையதளம் வாயிலாக 80% பேரும், கவுண்ட்டர்கள் வாயிலாக 20% பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

News June 13, 2024

WI vs NZ: சிறப்பான பந்துவீச்சால் கிடைத்த வெற்றி

image

இன்றைய உலகக்கோப்பை போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடித்தது. சிறப்பான பந்துவீச்சால் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி.

News June 13, 2024

ராணுவ பட்ஜெட் நிதியை 19% அதிகரித்த பாகிஸ்தான்

image

நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், அதிலிருந்து மீள IMFவிடம் இருந்து 6-8 பில்லியன் டாலர் கடனை எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு, நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 18.5 டிரில்லியனுக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் 2,100 பில்லியன் மதிப்பு ராணுவ பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 19% அதிகம் ஆகும்.

News June 13, 2024

மீண்டும் வடிவேலுவுடன் இணையும் சுந்தர்.சி

image

நடிகர் வடிவேலும், சுந்தர்.சி இணைந்து நடித்த தலைநகரம் திரைப்பட காமெடி காட்சிகள் பட்டையைக் கிளப்பின. இதேபோல் வின்னர் திரைப்படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்படுகின்றன. இந்நிலையில் வடிவேலும், சுந்தர்.சியும் மீண்டும் புதிய படத்தில் இணைய இருப்பதாகவும், அந்தப் படத்தில் 2 பேரும் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

News June 13, 2024

தங்கத்தின் விலை ₹160 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து விற்பனையாகிறது. நேற்று ₹53,440க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று ₹6,660க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ₹95.20க்கு விற்பனையாகிறது.

News June 13, 2024

தமிழர்களின் நிலை என்ன?

image

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என தமிழ்ச் சங்கங்கள் மூலம் தகவல் வந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். மொத்தம் அங்கு வீராச்சாமி மாரியப்பன், சின்னதுரை, விஜயகுமார், சிவசங்கர், கருப்பண்ணன் ராமு, பிராங்களின் ஜேம்ஸ், ரிச்சர்ட் ராய், முகமது ஷரீப் ஆகிய 8 தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

News June 13, 2024

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் பலி

image

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், இறந்தவர்களின் விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது 5 தமிழர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

News June 13, 2024

நிதிஷ் ஆப்சென்ட்: பாஜக கூட்டணியில் விரிசல்?

image

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாதது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி கியான் ரஞ்சன், மத்திய அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்குவதில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது தெளிவாக தெரிவதாகவும், இவ்வளவு சீக்கிரம் கூட்டணியில் விரிசல் வரும் என எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!