India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டுறவுத்துறையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதுவரை 10,848 கடைகளில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3ஆவது முறையாக பொறுப்பேற்றதும் நடைபெறும், முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 53ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், ஜூன் 22ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 இந்தியர்களை பலி வாங்கிய குவைத் தீ விபத்து நடந்த பகுதிக்கு மத்திய இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சென்றுள்ளார். உடல்கள் கருகி, அடையாளம் தெரியாமல் இருப்பதால், அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனை உடனிருந்து கவனித்து, இந்தியாவிற்கு உடல்களை மீட்டு வரும் பணியை அமைச்சர் செய்யவுள்ளார். இறந்தவர்களின் உறவினர்கள் இந்தியாவில் பரிதவிப்புடன் காத்துள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை எனில் போலீசார் யாரையும் கைது செய்யலாம். ஆனால், ராணுவத்தினர், கடற்படையினருக்கு 1973 குற்றவியல் நடைமுறை சட்ட 45ஆவது பிரிவின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாலியல், கொலை போன்ற குற்றங்களில் அவர்களை கைது செய்யலாம். மற்ற வழக்குகளில் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் கைது செய்ய முடியாது. அருகில் உள்ள ராணுவத் தலைமையகத்துக்கு தெரிவித்த பின், 2 மணி நேரம் விசாரிக்கலாம்.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் விசாரணை தீவிரமெடுத்துள்ளது. ஏற்கெனவே, சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு ஆகியோர் வழக்கு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்த இன்று நெல்லை செல்கின்றனர். தொடர்ந்து, உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு, 31.3.2021 தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்த ₹2,755 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த கடன் தள்ளுபடியால் 1,17,617 பேர் பயன் அடைந்துள்ளதாகவும், அதேபோல் மகளிர் சுய உதவி குழு கடன் உச்சவரம்பு ₹12 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.
கேரள பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த நடிகை சன்னி லியோனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருந்த சன்னி லியோனின் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கூறி, பல்கலைக்கழக துணை வேந்தர் மோகனன் குன்னும்மல், பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு நவம்பரில், கொச்சின் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியானதும், 60 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி நலனுக்காக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை தவிர்த்து முதல்வர் ஸ்டாலின் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத்தருமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற வேண்டிய நிலையில், கடந்தாண்டு 81.4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைக்கப் பெற்றதாக கூறினார். ஆனால், அதில் பாதியை கூட பெறாதது மாநில அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுவதாகவும் அவர் சாடினார்.
பிரபல தமிழ் சினிமா துணை நடிகர் பிரதீப் கே. விஜயன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தெகிடி, இரும்புத்திரை, லிஃப்ட், டெடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தனது குண்டான உடல் தோற்றத்துடன் கொடுத்த கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி நடிப்பில் தனித்துவம் பெற்றார். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றபின் முதல்முறையாக திருப்பதி கோயிலில் சந்திரபாபு நாயுடு வழிபட்டார். பின்னர் பேசிய அவர், ஆந்திராவில் நல்லாட்சி தொடங்கியுள்ளதாகக் கூறினார். நாட்டிலேயே ஆந்திராவை நம்பர் 1 மாநிலமாகவும் மாற்றுவேன் என்றும், குற்றம், அரசியல் சதிக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்ட அவர், திருமலையில் இருந்து நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.