news

News June 13, 2024

2ஆவது திருமணம் செய்தார் நடிகை ஸ்ரீதிகா

image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதிகா, ‘கோகுலத்தில் சீதை’, ‘மகராசி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இந்நிலையில், ‘மகராசி’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யனை காதலித்து வந்த நிலையில், அவரை மறுமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

News June 13, 2024

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்

image

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு என்.எஸ்.ஏ-வாக நியமிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் 2019இல் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. அத்துடன் அவரது பதவி, அமைச்சர் அந்தஸ்துக்கும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 3ஆவது முறையாக அவரை என்.எஸ்.ஏ-வாக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மோடியின் 3 அரசிலும் அவர், இதே பதவியில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

நீட் தேர்வு: “6 மையங்களுக்கு தவறான வினாத்தாள்”

image

நீட் தேர்வில் 6 மையங்களுக்கு தவறான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் சரியான வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவுபடுத்தியுள்ளார். கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தேர்வு எழுதாவிடில் முந்தைய மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். வினாத்தாள் குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்

News June 13, 2024

ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் உயர்த்தப்படுமா?

image

பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது, வசூலிக்கப்படும் பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஏடிஎம் ஆபரேட்டர்கள் (CATMI) ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, ​​மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால், ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களிடம், ₹21 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனை ₹23 ஆக உயர்த்த வேண்டும் என்று CATMI கோரியுள்ளது.

News June 13, 2024

நீட் தேர்வில் மிகப்பெரிய ஊழல்: கார்கே

image

நீட் நுழைவுத்தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் தவறான நடவடிக்கையால், நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்த அவர், இந்த முறைகேடு தொடர்பாக, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News June 13, 2024

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட சந்திரபாபு

image

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நில உரிமைச் சட்டம் ரத்து செய்து முதல் கையெழுத்திட்டுள்ளார். TDP தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ஓய்வூதியத்தை ₹4,000 ஆக உயர்த்துவதாக அறிவித்த அவர், 30 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி அளிக்கவும் ஆணையிட்டுள்ளார். அத்துடன், அண்ணா உணவகங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளார்.

News June 13, 2024

GST-க்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? (1/2)

image

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களை ஜிஎஸ்டி வரிமுறைக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால், எரிபொருள்களின் விலை குறையும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், இப்போது கிடைக்கும் நேரடி வந்துகொண்டிருக்கும் நேரடி வரி வருவாய் முற்றிலுமாக நின்றுவிடும் என மாநில அரசுகள் கூறுகின்றன.

News June 13, 2024

GST-க்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? (2/2)

image

ஏற்கெனவே, தமிழ்நாட்டுக்கு தருவதாக சொன்ன GST நிலுவைத் தொகையைத் தராத மத்திய அரசு, இதையும் கையிலெடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் முடங்கும் சூழல் உருவாகும். வரியாக ஒரு ரூபாய் அளிக்கும் தமிழகத்திற்கு, வெறும் 29 பைசாவைத் தான் மத்திய அரசு பங்கீடாக வழங்குகிறது. இதே நிலை தொடர்ந்தால், மாநில அரசால் எப்படி சுயாதீனமாக இயங்க முடியுமென மாநில சுயாட்சி ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

News June 13, 2024

தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் குறித்து பிரதமர் ஆலோசனை

image

ஜம்மு – காஷ்மீரில் தொடரும் தீவிரவாத தாக்குதலை ஒடுக்குவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

News June 13, 2024

எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்

image

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்வதற்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கர்நாடக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!