India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு செலுத்தப்படும் அமெரிக்க நாணயம் ‘பெட்ரோடாலர்’ என்று அழைக்கப்படுகிறது. 1972இல், தங்கத்திற்கு பதிலாக அமெரிக்கா பெட்ரோடாலரை அறிமுகப்படுத்தியது. ஜூன் 8, 1974 இல் பொருளாதார ஒத்துழைப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்ட சவுதி இதனை ஏற்றது. உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் இன்றுவரை தொடர்வதற்கு இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.
துணை நடிகர் பிரதீப் கே.விஜயன், குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தனியாக வசித்து வந்த அவருக்கு, மூச்சுத் திணறல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முதல் அவரை தொடர்பு கொண்ட நண்பர்கள், அவரிடம் இருந்து பதில் வராததால் காவல்துறையை நாடியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதை கண்டித்து, சவுக்கு சங்கர் 2 நாள்கள் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்ததாக, அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுக்கு சங்கர் மீதான வழக்கை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நடத்தி வருவதாகவும், ஆனால், சிறையில் சவுக்கு சங்கர் கொடுமைக்கு உள்ளாவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் வெளியுறவுத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
T20 உலகக்கோப்பையில் மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து ஆடி வருகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர் 8) தகுதிபெறும். தற்போது, 4 பிரிவில் இருந்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. மீதம் உள்ள 4 இடங்களுக்கு 14 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் எந்த 4 அணிகள் தகுதிபெறும் என நினைக்கிறீர்கள்?
மோடி தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில், 99% அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும், 39% அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹107.94 கோடியாகும். மொத்தமுள்ள 71 மத்திய அமைச்சர்களில், 28 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 19 பேர் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் இருக்கின்றன.
சென்னை போன்ற நகரங்களில் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹20000, பிற மாவட்டங்களில் பணிபுரிவோருக்கு ₹15000 வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், பயிற்சி பெறும்போது அவர்களுக்கு ₹8000 வரை வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குநர், மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 – 37 வயதுடையவர்கள் <
ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர, பாதுகாப்புப் படையினர் முழு பலத்தையும் பயன்படுத்த பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். 4 நாள்களாக நடந்துவரும் தீவிரவாத தாக்குதலை ஒடுக்குவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நந்தனம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் உள்பட சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.