India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெகவில் நடிகர்கள் லாரன்ஸ், பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற கட்சிகள் தங்கள் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பலர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உதவிய குவைத் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 1 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்புஜா சிமெண்ட்ஸ், பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை (PCIL) ₹10,422 கோடிக்கு வாங்கியுள்ளது. PCIL தலைவர் பிரதாப் & அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள அந்நிறுவனத்தின் 100% பங்குகள் மாற்றப்படும் என அம்புஜா சிமெண்ட்ஸ் சி.இ.ஓ அஜய் கபூர் தெரிவித்துள்ளார். PCIL, ஆண்டுக்கு 14 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைக் கட்டமைப்பு & திறனைக் கொண்டுள்ளது.
T20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 159/5 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்து 38 பந்துகளில் அரை சதம் அடித்த ஷகிப் அல் ஹசன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64* ரன்களும், தன்ஷித் ஹசன் 35, மஹ்மதுல்லா 25 ரன்களும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத், மீகெரென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் குறிப்பிட்ட மதங்களை மட்டும் திணிப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள TN Fact Check தளம், அந்த புத்தகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக அனைத்து மதமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பிட்ட மதத்தை மட்டும் திணிப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது
வார இறுதி, பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னை – திருச்சி, மதுரை, நெல்லை, குமரிக்கு செல்வதற்கான கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. கட்டண உயர்வை தடுக்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவுடனான பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தை சவுதி அரேபியா ரத்து செய்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 8, 1974 இல், அமெரிக்கா-சவுதி இடையே பெட்ரோ டாலர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த ஒப்பந்தம் ஜூன் 9ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், அதனை சவுதி நீட்டிக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், அதை நீட்டிக்க சவுதி சம்மதிக்கவில்லை.
சவுதியிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் உலக நாடுகள் இதுவரை டாலரை மையப்படுத்தியே வர்த்தகம் செய்துவந்தன. அதற்கு காரணமான பெட்ரோ டாலர் ஒப்பந்தம் தற்போது காலாவதியானதால், சவுதியிடம் ரூபாய், யூரோ, யென், தினார், ரியால் போன்ற கரன்சிகளில் வணிகம் செய்ய முடியும். அரசியல் & பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் செய்துவரும் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தின் மீது விழுந்த சம்மட்டி அடியாக பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.