news

News June 13, 2024

அமித் ஷா அறிவுரை தான் கூறினார்: தமிழிசை

image

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில், அமித் ஷா தனக்கு அறிவுரைதான் கூறினார் என தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தேர்தலின்போது சந்தித்த சவால்கள், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்தும் அவர் தன்னிடம் ஆலோசித்ததாக தமிழிசை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்ததால் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக தகவல் வெளியானது.

News June 13, 2024

பதான் வீரர்களுக்கு கல்வியறிவு இல்லை: இஜாஸ் அகமது

image

பாகிஸ்தான் அணி முன்னாள் வீரரான இஜாஸ் அகமது, பதான் சமூக வீரர்கள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. PAK அணியில் பதான் இனத்தைச் சேர்ந்த 6 – 8 வீரர்கள் இருப்பதாகக் கூறிய அவர், “கல்வியறிவு இல்லாத அந்த வீரர்களால் ஆடுகளத்தில் அழுத்தமான சூழல்களை சரியாகக் கையாள முடியாது” என்று பேசியிருக்கிறார். இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தானியர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News June 13, 2024

பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம்

image

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 11 செப்டம்பர் 2019 அன்று முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, அவரது பதவிக்காலத்தை 2ஆவது முறையாக நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நியமன உத்தரவு பிரதமரின் பதவிக்காலம் வரை அமலில் இருக்கும் என மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – நிறைவான நாள்
*ரிஷபம் – ஓய்வு தேவை
*மிதுனம் – அனுகூலம் உண்டாகும்
*கடகம் – அலைச்சல் அதிகரிக்கும்
*சிம்மம் – பண வரவு தேடி வரும்
*கன்னி – வெற்றிகரமான நாள்
*துலாம் – நன்மை கிடைக்கும்
*விருச்சிகம் – பகை ஏற்படும்
*தனுசு – ஜெயம் உண்டாகும்
*மகரம் – மறதி அதிகரிக்கும் *கும்பம் – தோல்வி ஏற்படும் *மீனம் – உடல் நலனில் அக்கறை தேவை

News June 13, 2024

முப்பெரும் விழா வீண் விளம்பரம்: அண்ணாமலை

image

திமுகவின் முப்பெரும் விழா கோவையில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த முப்பெரும் விழா திமுகவின் வீண் விளம்பரம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், மத்திய அரசின் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், “சாலையைக் கூட ஒழுங்காக போட முடியாத அரசுக்கு முப்பெரும் விழா ஒரு கேடா?” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

News June 13, 2024

ஏழை, மிடில் கிளாஸ் வீட்டில் வருமானம் அதிகரிக்கவில்லை

image

இந்தியாவில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட 77 சதவீத குடும்பங்களில், கடந்த 5 ஆண்டுகளாக வருமானம் அதிகரிக்கவில்லை என Redseer என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில், பல குடும்பங்கள் சீரற்ற வருவாயை கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், இவர்கள் மொத்த வருவாயில் 20%க்கும் குறைவாகவே சேமிப்பதாக தெரிகிறது. தேசிய சராசரி 30% என்பது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

AUS அணி இதை செய்தே தீர வேண்டும் : டிம் பெயின்

image

இங்கிலாந்து அணி தொடர்பான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டிம் பெய்னின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து ENG அணி போட்டியில் இருந்து வெளியேறினால், AUS அணி எளிதாக பட்டம் வெல்ல முடியுமெனக் கூறிய டிம் பெய்ன், இதனை தான் நகைச்சுவையாக கூறவில்லை என்றார். AUS அணி இம்முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் எனவும் அதற்குரிய உத்திகளை கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News June 13, 2024

ஜூன் 26இல் மக்களவைத் தலைவருக்கான தேர்தல்

image

மக்களவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292, INDIA கூட்டணி 234 இடங்களில் வென்றன. ஜூன் 9ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி, தேர்தலில் வெற்றி பெற்ற MP-க்கள் வாக்கு செலுத்தி மக்களவைத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

News June 13, 2024

விஜய் கட்சியில் இணையும் லாரன்ஸ், பாலா?

image

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெகவில் நடிகர்கள் லாரன்ஸ், பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

News June 13, 2024

தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு: இபிஎஸ்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற கட்சிகள் தங்கள் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

error: Content is protected !!