news

News June 14, 2024

விக்கிரவாண்டியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. திமுக சார்பாக அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவும் போட்டியிட ஆர்வம் காட்டும் நிலையில், மும்முனை போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. இத்தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரலில் இறந்ததையடுத்து இங்கு ஜூலை 10இல் தேர்தல் நடைபெற உள்ளது.

News June 14, 2024

மாயாவதி குறித்து சர்ச்சை பேச்சு: நடிகர் மீது வழக்கு

image

உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சினிமா நடிகரான கமல் ரஷித் கான், அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சஹாரன்பூர் மாவட்டத்தின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சுஷில் குமார் புகார் அளித்த நிலையில், நடிகர் கமல் ரஷித் கான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 14, 2024

ஆப்கான் பந்துவீச்சில் திணறும் பப்புவா நியூ கினியா

image

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருவதால், அந்த அணி ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது. 6 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆப்கான் அணியின் பசல்ஹக் ஃபாரூக் மற்றும் நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News June 14, 2024

13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

image

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். ரீட்டா ஹரீஸ், நந்தகுமார், நாகராஜன், சிகி தாமஸ் வைத்யன், சரவணவேல்ராஜ், விஜயராஜ்குமார், அன்பழகன், பிரஜேந்திரா நவ்நீத், சமீரன், சிவகிருஷ்ணமூர்த்தி, பூஜா குல்கர்னி, அலர்மேல்மங்கை, லலித் ஆதித்யா நீலம் ஆகியோர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

News June 14, 2024

திருமங்கலக்குடி பரிகார ஆலயத்தின் சிறப்பம்சம்

image

நவக்கிரக பரிகார திருத்தலங்களில் திருமங்கலக்குடி ஆலயம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் திருமங்கலக்குடி. இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக பிராணவரதேஸ்வரரும், அம்பாளாக மங்கள நாயகியும் அருள் புரிகிறார்கள். திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் சிலாகித்து பாடப்பட்டிருக்கும் புண்ணிய பூமியாக இந்த ஆலயம் உள்ளது.

News June 14, 2024

T20 WC: ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு

image

பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த போட்டியில் வென்றால், ஆப்கான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். பப்புவா நியூ கினியா வென்றால் உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

அமித் ஷா அறிவுரை தான் கூறினார்: தமிழிசை

image

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில், அமித் ஷா தனக்கு அறிவுரைதான் கூறினார் என தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தேர்தலின்போது சந்தித்த சவால்கள், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்தும் அவர் தன்னிடம் ஆலோசித்ததாக தமிழிசை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்ததால் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக தகவல் வெளியானது.

News June 14, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ குவைத் தீவிபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
➤ பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா நியமனம்
➤ பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு
➤ ஆந்திராவை முதல் மாநிலமாக மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு
➤ அமித் ஷா அறிவுரை மட்டுமே கூறினார்: தமிழிசை
➤ ‘தேவாரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

News June 14, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், தேர்தல் முன் ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 575 பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், 575 விவி பேடு இயந்திரங்கள் வந்துள்ளன. இங்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

News June 14, 2024

T20 WC: எலிமினேட் ஆன இலங்கை அணி

image

நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் டி பிரிவில், வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. வங்கதேச அணியின் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. டி பிரிவில் தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!