news

News June 14, 2024

செல்வப்பெருந்தகை முடிவு செய்ய முடியாது: ராகுல் காந்தி

image

தமிழகத்தில் யாருடன் கூட்டணியமைக்க வேண்டும் என்பதை செல்வப்பெருந்தகை முடிவு செய்ய முடியாது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை, “எத்தனை காலத்திற்குதான் கூட்டணியை நம்பியிருப்பது?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதுகுறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து முடிவு செய்ய பல முக்கியத் தலைவர்கள் இருக்கின்றனர் என்று ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

News June 14, 2024

30 ஆண்டுகள் வரை வாழும் “ராணி எறும்புகள்”

image

சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்புகள், உடல் எடையை விட 20 மடங்கு அதிக எடையை தூக்கக்கூடியவை. அவற்றில் உணவு தேடும் எறும்பு, எதிரிகளை தாக்கும் எறும்பு, கூடு கட்டும் எறும்பு, ராணி எறும்பு எனப் பல வகைகள் உண்டு. இதில் ராணி எறும்பு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை வாழும் என்பதும், இன விருத்தியில் ஈடுபடும் ஆண் எறும்பு, சேர்க்கைக்குபின் ஓரிரு நாளில் இறந்துவிடும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News June 14, 2024

₹10 அம்மா குடிநீர் பாட்டில் திரும்ப கிடைக்குமா?

image

ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மறக்க முடியாத திட்டங்களில், பேருந்து நிலையங்களில் ₹10க்கு அம்மா குடிநீர் பாட்டில் விற்கும் திட்டமும் ஒன்று. அவர் மறைவுக்கு பிறகு, அத்திட்டத்துக்கு படிப்படியாக மூடுவிழா காணப்பட்டது. இதனால், 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மீண்டும் ₹15-₹20 வரை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏழை பயணிகள் நலன் கருதி, ₹10 குடிநீர் பாட்டிலை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?

News June 14, 2024

இன்று உலக ரத்தத் தான நன்கொடையாளர் தினம்

image

ஆஸ்திரியாவை சேர்ந்த விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர், ஏபிஓ ரத்த குழு அமைப்பை கண்டுபிடித்து, ரத்த தானம் முறைக்கு வழிவகுத்தார். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ ஆராய்ச்சியில் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. இதனால் ரத்தமின்றி உயிரிழக்கும் பல லட்சம் பேரின் மரணங்கள் தடுக்கப்பட்டன. எனவே அவர் பிறந்த நாளான ஜுன் 14ஆம் தேதி உலக ரத்தத் தானம் செய்வோர்/நன்கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

News June 14, 2024

வேட்பாளரை அறிவித்தார் சீமான்

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சித்த மருத்துவரான அபிநயா அத்தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்கிடுமாறும் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே அன்னியூர் சிவாவை வேட்பாளராக திமுக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்புதல்

image

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களைக் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ரூ.2,820.90 கோடி மதிப்பில் கூடுதலாக 28 மெட்ரோ ரயில்களை வாங்க நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு 2 ஆண்டுகள் வரையிலாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News June 14, 2024

T20WC: மழையால் வெளியேறுகிறதா பாகிஸ்தான்?

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மழையின் காரணமாக பாகிஸ்தான் அணி வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறும் அமெரிக்கா – அயர்லாந்து இடையேயான போட்டியின்போது மழை பெய்ய 31% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் அமெரிக்கா தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பதால், அந்த அணியின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

News June 14, 2024

தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வென்றுள்ளது பாஜக: ராவத்

image

தோல்வியடைந்த 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி பாஜக வென்றுள்ளதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜனநாயகத்தில் மக்கள்தான் கடவுள் என்றும், அந்தக் கடவுள் பாஜகவை பார்த்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். ராமர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

News June 14, 2024

சிறையில் பாலாஜி: திமுகவுக்கு பாதிப்பா? இல்லையா?

image

பணமோசடி வழக்கில் 2023 ஜுன் 14இல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனால் அவரின் சொந்த மாவட்டமான கரூர், அதன் அண்டை மாவட்டங்களில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலில் கரூர், அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, அவர் சிறையில் இருந்தாலும் திமுகவுக்கு பாதிப்பில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

News June 14, 2024

ஆகஸ்ட் மாதம் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ தொடக்கம்

image

மாணவிகள் போல் மாணவர்களுக்கும் மாதம் ₹1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஐம்பெரும் விழாவில் பங்கேற்ற அவர், அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்பட உள்ளதாக கூறினார். தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

error: Content is protected !!