India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாய்களின் உளவியல், நடத்தைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து இந்திய கென்னல் கிளப் தொடர்ந்த வழக்கில், விரிவான ஆய்வு செய்தபின்பு நாய்கள் ஆரோக்கியமானவையா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
T20 WCயில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் ஷாகிப் மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய அணி வீரர் சேவாக் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘சேவக் யார்? ஒரு வீரர் எப்போதும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என ஷாகிப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தான் அணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் விமர்சனத்தை தவிர்க்கிறேன் என்றார்.
பி.எஸ்.எஃப் துணை ராணுவப் படையின் பாராமெடிக்கல் பிரிவில் நிரப்பப்படவுள்ள 172 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Nurse, Physio-therapist உள்ளிட்ட பணியில் சேர ஆர்வமும் கல்வித் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 30. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17. ஊதியம்: ₹21,700 – ₹1,42,400/-. கூடுதல் தகவல்களுக்கு <
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி, கொத்தமல்லி தழை, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை விண்ணை முட்டுகிறது. இதுதவிர, உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் முட்டையும் சில்லறை விலையில் ₹7க்கு விற்பதால் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக நடுத்தர மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ள நிலையில், கூட்டணி குறித்து த.வெ.க தலைவர் விஜய்தான் அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கட்சியில் பல லட்சம் பேர் இணைந்துள்ளதாகக் கூறிய அவர், மாநில மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், உரிய அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளருக்கு எதிரான பாலியல் வழக்கில் சமரசம் செய்யக் கூறி, நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டுவதாக நடிகை காயத்ரி சாய் தெரிவித்துள்ளார். முதல்வரின் தனிப்பிரிவு, அரசு பெயரை பயன்படுத்துவதாகவும், கல்லூரி செல்லும் தனது மகளை இந்த விவகாரத்தில் இணைத்துவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சில ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே மாதம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் முடிவுக்கு பிறகு ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை முறையாக பொருள்கள் கிடைக்கவில்லை என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்திட மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்ட அக்கா தமிழிசையின் அனுபவமும், ஆலோசனைகளும் உதவும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசையை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதில் தான் பெருமகிழ்ச்சி அடைந்ததாகக் கூறிய அவர், இச்சந்திப்பில் புதிய உத்வேகத்தைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசையை அண்ணாமலை மரியாதை நிமித்தமாக, அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து பேசியுள்ளார். தேர்தல் கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து தமிழிசை தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமானது. இந்த விவகாரம் தமிழிசை Vs அண்ணாமலை என இணையத்தில் ட்ரெண்டானது. இச்சந்திப்பின் மூலம், மோதலுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.