news

News June 14, 2024

‘கல்கி 2898 ஏடி’ முதல் சிங்கிள் ப்ரோமோ குறித்த அப்டேட்

image

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ நாளை வெளியாகவுள்ளது. இது தொடர்பாக ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், நாட்டிலேயே மிகப் பிரபலமான நடிகருக்கு மிகவும் கொண்டாடப்படும் பாடகர் என போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

News June 14, 2024

படுக்கையறையில் இவ்வளவு இருக்கா?

image

வீட்டின் படுக்கையறையை தென்மேற்கு, தெற்கு அல்லது மேற்கு திசைகளில் கட்ட வேண்டும். வடகிழக்கு திசையில், தென்கிழக்கு திசையிலும் அமைக்க கூடாது. இதற்கு காரணம், வீட்டில் லட்சுமி தங்கியிருப்பதுடன், மனநிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு அமையும் என நம்பப்படுகிறது. படுக்கையறையில் கண்ணாடிகளும், செவ்வக, சதுர வடிவிலேயே இருக்க வேண்டும். மற்ற எந்த வடிவமாக இருந்தாலும் ஆரோக்கிய குறைபாடுகள் குடும்பத்தில் வரலாம்.

News June 14, 2024

பாலஸ்தீன ஆண்களை பாலியல் சித்ரவதை செய்த இஸ்ரேல்

image

காஸாவில் உள்ள பாலஸ்தீன பெண்களையும், ஆண்களையும் இஸ்ரேல் ராணுவம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஐ.நா.விசாரணையில் தெரியவந்துள்ளது. காஸா போர் தொடர்பாக UNHRC முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறியதோடு, இஸ்ரேல் ராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

‘குரங்கு பெடல்’ படம் ஓடிடியில் வெளியானது

image

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், கமல் கண்ணன் இயக்கத்தில் கடந்த மே 3ஆம் தேதி வெளியான படம் ‘குரங்கு பெடல்’. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் 5 சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

News June 14, 2024

மகளிர் உரிமைத் தொகை ₹1000 நாளை வரவு

image

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1000, நாளை காலை 10 மணிக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிபடி, மாதந்தோறும் பெண்களுக்கு ₹1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10ஆவது தவணைத் தொகை நாளை வரவு வைக்கப்பட உள்ளது.

News June 14, 2024

ஹார்திக் பாண்டியாவை பாராட்டிய ஸ்ரீசாந்த்

image

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹார்திக் பாண்டியா சிறப்பாகப் பந்துவீசுவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். முக்கியமான நேரத்தில் பந்துவீசி, எதிரணியை திணர வைத்து, விக்கெட்டுகளை ஹார்திக் கைப்பற்றுவதாகக் கூறிய ஸ்ரீசாந்த், ஆஸ்திரேலிய அணிக்காக மார்கஸ் ஸ்டாய்னிஸ் செய்வதை இந்திய அணிக்காக ஹார்திக் பாண்டியா செய்து வருகிறார் எனவும் பாராட்டியுள்ளார்.

News June 14, 2024

போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை

image

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக, தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை வாகனங்கள் ஊர்ந்தவாறு செல்கின்றன. இதனிடையே, தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

News June 14, 2024

சூப்பர்-8: இணையும் மற்ற 3 அணிகள்?

image

டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர்-8’-க்கு இதுவரை 5 அணிகள் முன்னேறியுள்ளன. A பிரிவில் இருந்து IND, B பிரிவில் இருந்து AUS, C பிரிவில் இருந்து WI & AFG ஆகிய இரு அணிகள், D பிரிவில் இருந்து SA ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. 3 இடங்களே மீதமுள்ள நிலையில், அதற்காக USA, PAK, SCO, ENG, BAN & ND ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. கனடாவும் (-0.493) அயர்லாந்தும் (-0.408) சூப்பர்8-ஐ எட்டுவது சாத்தியமற்றது.

News June 14, 2024

போரை நிறுத்த தயார்… ஆனால் இரண்டு நிபந்தனைகள்

image

நேட்டோவில் உறுப்பு நாடாக இணையும் முடிவை உக்ரைன் வாபஸ் பெற்றால், போர் நிறுத்தத்தை அமல்படுத்த தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ரஷ்யப் பிராந்தியத்தின் நான்கு பகுதிகளிலிருந்தும் உக்ரைன் படைகளை திரும்பப் பெற வேண்டும். அத்துடன், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க முன்வர வேண்டும். இரு கோரிக்கைகளை ஏற்றால் போரை நிறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

சாதி மறுப்பு திருமணம்: கம்யூ., அலுவலகம் மீது தாக்குதல்

image

தென்மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. பட்டியலின இளைஞருக்கும் ,வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது. இதனால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.

error: Content is protected !!