news

News June 14, 2024

திமுக இல்லாமல் காங்கிரஸால் தனித்து வெல்ல முடியுமா? (1/2)

image

‘தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம்’ என காங்கிரஸ் கட்சியின்
இந்நாள் & முன்னாள் தலைவர்கள் மேடைகளில் அடிக்கடி கூறுவதுண்டு. உண்மையில், காங்கிரஸுக்கு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ளதாக என கேள்வி எழுந்துள்ளது. விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரம் குறித்து காங்கிரஸின் வாக்கு வங்கி குறித்து புள்ளிவிவரங்களின் அடிப்படையில், விரிவாகப் பார்ப்போம்.

News June 14, 2024

சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் காலமானார்

image

சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஹெக்டே (71) உடல்நலக் குறைவால் காலமானார். 1978 – 2014 வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) பணிபுரிந்த ஸ்ரீநிவாஸ், நிலவின் ரகசியங்களை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான்-1 மிஷனின் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News June 14, 2024

குதிரையேற்றம்: வரலாறு படைத்த ஸ்ருதி வோரா

image

ஸ்லோவேனியா 3 ஸ்டார் கிராண்ட் ப்ரீ குதிரையேற்றப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ருதி வோரா முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். லிபிகா நகரில் நடந்த பைனலில் சிடிஐ -3 பிரிவில் பங்கேற்ற ஸ்ருதி, 67.761 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், இப்போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதே போல, கிராண்ட் ப்ரீ ஸ்பெஷல் போட்டியில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.

News June 14, 2024

அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

image

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் பயன், முறையாகச் சென்று சேருவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தாமதமாகி வருவதால், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை உள்ளிட்டவைகளை வழங்க, ₹78.67 கோடியில் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

News June 14, 2024

அண்ணாமலை எங்கே சென்றார்?

image

மழைக்காலத் தவளை போல கூவிக் கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கே சென்றார் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டியில் நடந்த திமுக வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் நலத்திட்டங்களை பாராட்டும் வகையில் மக்கள் திமுக கூட்டணியை வெற்றிபெற வைத்தனர். தமிழகத்தில் தாமரை மலரும் என்றவர்களை இப்போது காண முடியவில்லை” என்றார்.

News June 14, 2024

#விஜய்சேதுபதி50 உங்கள் சாய்ஸ் எது?

image

தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறை நடிகர்களில் குறுகிய காலத்தில் 50 படங்களில் நடித்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவர் நடித்துள்ள 50வது படமான ‘மகாராஜா’ இன்று வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அவரது படங்களில் பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், 96, இறைவி, கவண், விக்ரம் வேதா ஆகியவை கவனிக்கப்படும் படங்களாக உள்ளது. உங்களுக்கு பிடித்த படம் எது?

News June 14, 2024

T20 WC: 0 ரன்கள், 0 விக்கெட்டுகள், 0 கேட்சுகள்

image

இந்திய அணியின் மூத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டி20 WCயில் தொடர்ந்து தடுமாறிவருகிறார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய அவரது சராசரி விகிதம் (ரன் 0, விக்கெட் 0, கேட்ச் 0) மோசமாக உள்ளது. ஒரு போட்டியில் பேட்டிங் செய்த அவர், அதில் டக் அவுட் ஆனார். கடந்த போட்டியில் அவர் பவுலிங் செய்யவில்லை, இதுவரை ஒரு கேட்சும் பிடிக்கவில்லை. அவரது மோசமான பார்ம் காரணமாக அணியில் ஜெய்ஸ்வாலை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது

News June 14, 2024

தமிழிசை அக்காவிடம் அமித்ஷா பாசமாக பேசினார்

image

தமிழிசை சௌந்தரராஜனிடம், அமித்ஷா மேடையில் வைத்து கோபமாக பேசிய விவகாரத்தில், அமித்ஷா அனைவரிடமும் இப்படித்தான் ஃப்ரீயா பேசுவார் என அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மேடையில் அவருக்கும், அமித்ஷா ஜிக்கும் நடந்த உரையாடலை பலரும் பலவிதமாகக் கூறிவருகின்றனர் என்றார். மேலும், அமித்ஷா அனைவரிடமும், உரிமையாக பாசமாக பேசக்கூடியவர். அப்படித்தான் தமிழிசை அக்காவிடமும் பாசமாகப் பேசினார் என்றார்.

News June 14, 2024

ஜூன் 15, ஜூலை 20-ல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக கடந்தாண்டு ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய 2 நாள்கள், நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்ப விநியோகம் மற்றும் பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. அந்த 2 நாள்களுக்குப் பதிலாக, நாளை ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய இரு சனிக்கிழழைகளும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளித்து, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.

News June 14, 2024

கமலுக்கு நேரில் சென்று நன்றி

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. அதில், நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் திமுக மற்றும் கூட்டணிக்கு கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்நிலையில், திமுக MP தமிழச்சி தங்கப்பாண்டியன், காங்., MPக்கள், விஜய் வசந்த், சுதா ஆகியோர் கமலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன், நன்றியும் தெரிவித்தனர்

error: Content is protected !!