news

News June 15, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றிக்கான வழி.
➤ உபதேசம் செய்வதை விட, ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.
➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
➤ தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது.
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும்

News June 15, 2024

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது

image

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை மறுத்திருந்தது. இந்நிலையில், தேர்வில் முறைகேடு செய்ய உதவியதாக 5 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

News June 15, 2024

அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்: ஈவிகேஎஸ்

image

விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்ற அவர், பாஜகவின் மதவாத அரசியல் தமிழகத்தில் எப்போதும் எடுபடாது என்றார். தமிழிசையை பொது இடத்தில் அமித் ஷா அவமதித்ததை ஏற்க முடியாது, இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

News June 15, 2024

வரலாற்றில் இன்று

image

➤ 1389 – கொசோவோவில் நடந்த போரில் ரோமானியர்கள், செர்பியர்களையும் தோற்கடித்தனர்.
➤ 1502 – கொலம்பஸ் தனது நான்காவது கடற்யணத்தின் போது மர்தினிக்கு தீவுக்கு சென்றார்.
➤ 1752 – பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.
➤ 1836 – ஆர்கன்சா 25வது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
➤ 1991 – பிலிப்பைன்ஸ் பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

News June 15, 2024

எத்தனை முறை வந்தாலும் வெற்றி கிடைக்காது

image

இந்தியாவில் 21 இடங்களில் பாஜக கூட்டணிக்கு டெபாசிட் போன ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என திமுகவின் காசிமுத்து மாணிக்கம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய அதிக அளவு நிதி வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடி 8 முறை பரப்புரை செய்தும், ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை என்றார். தமிழகத்தில் பாஜக தற்போது ஜூரோவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News June 15, 2024

சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான நடிகை ஹேமா

image

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில் தெலுங்கு நடிகை ஹேமா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகை ஹேமாவுக்கு, 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அன்றைய தினம் அவர் விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் தொடர்பான அலுவல் பணிகள் முடிந்த நிலையில், ஹேமா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

News June 15, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

News June 15, 2024

கார்களில் கட்சிக்கொடி கட்டினாலும் நடவடிக்கை

image

வாகனங்களில் வழக்கறிஞர், மருத்துவர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு மட்டும் இடைக்கால விலக்களித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

News June 15, 2024

டி20 WC: சூப்பர் 8 சுற்றை உறுதி செய்த 6 அணிகள்

image

டி20 WC இதுவரை 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பி பிரிவில் ஆஸி., சி பிரிவில் ஆப்கான், வெஸ்ட் இண்டீஸ், டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வாகியுள்ளன. மேலும் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டியுள்ளது. இதற்காக இங்கி., உள்ளிட்ட 5 அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. அடுத்த சில நாள்களில் சூப்பர் 8 செல்லும் அணிகளின் முழு விவரம் தெரியவரும்.

News June 15, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!