India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ திமுக அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது: அண்ணாமலை
➤ பாஜக படம் தமிழகத்தில் ஓடாது: சேகர்பாபு
➤ மக்களுக்காக பாஜக ஆட்சி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
➤ இந்தியாவின் மதிப்பு உலகளவில் உயர்ந்துள்ளது: ஜே.பி.நட்டா
➤ மா.பொ.சி படத்தின் பெயர் மாற்றம்
➤ அமெரிக்கா-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து
மாநிலங்களவைத் தேர்தலில் தனது மனைவி போட்டியிடுவதால் யாருக்கும் வருத்தமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு எடுத்த முடிவின் அடிப்படையிலேயே, தனது மனைவி போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அஜித் பவாரின் மனைவி சுனித்ரா பவார், பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவிடம் தோல்வி அடைந்தார்.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் எடியூரப்பாவிற்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் சாதாரண மனிதன் முதல் மாநில முதல்வர்கள் வரை கைது செய்யப்படும் போது, பாஜகவை சேர்ந்த எடியூரப்பா மட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேபாள அணி 2 போட்டிகளில் விளையாடி 1 தோல்வி, 1 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறியவர்களை காணவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மழைக்கால தவளை போல் கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே சென்றார்? என்று கேள்வி எழுப்பிய அவர், திராவிட இயக்க பூமியில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது என்றார். திமுக அரசின் நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த மதிப்பெண்ணே, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக யூசுப் பதானுக்கு எதிராக குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலத்தை கடந்த 2012ஆம் ஆண்டு யூசுப் பதானுக்கு விற்பதற்கான வதோதரா மாநகராட்சி முன்மொழிவை, மாநில அரசு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜூன்- 15 | ஆனி – 01
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 04.30 PM – 05.30 PM
▶கெளரி நேரம்: 10:30 PM – 11:30 PM, 09:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶ திதி : சூன்யம்
நாட்டின் குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் நேற்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல தலைநகர் சிம்லாவில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்காக கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவு செரிமான பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் நெல்லிக்காய் சிறந்த தீர்வு. ஜீரணக்கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் அரை நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு கிளாஸ் குடித்தால் உடனே பலன் கிடைக்கும். உடலுக்கு ஆற்றல் ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.
Sorry, no posts matched your criteria.