news

News June 15, 2024

ரவுடி பட்டியல் வழக்கில் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

image

ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி உத்தரவிட கோரி, தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். ரவுடி பட்டியல் தயாரிப்பில் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஜிபிக்கு எதிராக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

News June 15, 2024

APPLY NOW: துணை ராணுவப் படையில் வேலை

image

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தம் உள்ள 170 பணியிடங்களுக்கு 25 – 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம்: <>https://rectt.bsf.gov.in/<<>> கடைசித் தேதி: ஜூன் 17.

News June 15, 2024

BREAKING: தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு

image

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 700 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. இந்நிலையில், ரேஷன் அட்டையை ஒப்படைத்துவிட்டு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திராவில் தஞ்சமடைய உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

News June 15, 2024

இந்திரா காந்தியை புகழ்ந்த பாஜக அமைச்சர்

image

மலையாள நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சராகியுள்ளார். இதையடுத்து மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திரா காந்தியை இந்தியாவின் தாய் என்றும், கருணாகரன் மற்றும் இடதுசாரி மூத்த தலைவர் ஈ.கே. நாயனாரை தமது அரசியல் குரு என்றும் புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 15, 2024

இடைத் தேர்தலில் பாமகவுக்கு புது சின்னம்?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து பின்னடைவைச் சந்தித்த நிலையில், மாம்பழச் சின்னம் பறிபோய் விட்டதால், இடைத் தேர்தலில் அந்த சின்னத்தில் பாமகவால் போட்டியிட முடியாது. எனவே தேர்தல் ஆணையத்திடம் வேறு புதிய சின்னத்தை பெற்றே இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலை பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது.

News June 15, 2024

சுமார் 5.5 லட்சம் வாக்குகள் மாயம்: ஆய்வறிக்கை

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் மொத்தம் 5,54,598 வாக்குகள் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘The Quint’ இணைய ஊடகம் நடத்திய ஆய்வில், பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதே போல, 176 தொகுதிகளில், பதிவான வாக்குகளைவிட 35,093 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

News June 15, 2024

UPI மூலம் 47% இந்தியர்களிடம் நூதன மோசடி

image

மக்கள் UPI மூலம் பணம் செலுத்தும் வழக்கத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல், நூதன முறையில் 47% இந்தியர்களிடம் கைவரிசை காட்டியுள்ளது. UPI லிங்கை அனுப்பி அதை திறக்கும்படியோ, ஸ்கேன் செய்யும்படியோ அறிவுறுத்தும் இக்கும்பல், அதை நம்பி மக்கள் OTP அல்லது PIN விவரங்களைக் கொடுத்ததும், UPI மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை திருடியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News June 15, 2024

தேசம் அருந்ததி ராயின் பக்கம் நிற்கும்: எம்பி சு.வெங்கடேசன்

image

சமூக செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம் என்றும், அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தேசம் அருந்ததி ராயின் பக்கம் நிற்கும் என்றும் சூளுரைத்துள்ளார்.

News June 15, 2024

என்ன செய்ய போகிறார் டிடிவி?

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், ஜுன் 4ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக தலைமைப் பதவி டிடிவி தினகரன் வசம் செல்லும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். மத்தியில் ஆட்சியிலுள்ள கட்சியை சேர்ந்த அவர் இவ்வாறு கூறியது, டிடிவி தினகரனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் டிடிவி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.

News June 15, 2024

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!