news

News June 15, 2024

ஜூலை 5இல் தொடங்குகிறது 8ஆவது சீசன் TNPL போட்டி

image

8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நடத்தப்படும் TNPL கிரிக்கெட் போட்டிக்கு உள்ளூர் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர்,மதுரை, திருச்சி ஆகிய அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கும். சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் போட்டி நடைபெறும்.

News June 15, 2024

உடனே உங்க ஃபோனை எடுத்து ஒரு மெசேஜை தட்டுங்க

image

எங்கேயாவது மின்திருட்டு நடப்பது தெரிந்தால், உடனே கைப்பேசியை எடுத்து, உங்கள் விவரங்களை தெரிவிக்கலாமலே, மின்திருட்டு இடம், புகைப்படம் ஆகியவற்றை CCMS செயலியில் பகிரலாம் என மின்வாரியம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மின் திருட்டை தவிர்ப்பதால், கூடுதல் மின் தேவை சுமை குறையும். தரமான மின்சாரம் வழங்க உதவும். பொருளாதாரம் மேம்படும். உயிர்களை காக்கும். சமூகம் மேம்படும் எனத் தெரிவித்துள்ளது.

News June 15, 2024

விக்கிரவாண்டி சாதகமாக இருந்தும் ஏன் புறக்கணிப்பு?

image

2021 சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் புகழேந்தி 93,730, அதிமுகவின் முத்தமிழ் செல்வன் 84,157 வாக்குகள் பெற்றனர். இருவருக்கும் இடையே 9573 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். இதற்கு முன் 2019 இடைத்தேர்தலில் அதிமுக 1,13,766, திமுக 68,842 வாக்குகளும் பெற்றுள்ளன. இந்த தொகுதி அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், ஏன் இபிஎஸ் புறக்கணிக்கும் முடிவை எடுத்தார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

News June 15, 2024

“நடிகை ரோஜா கைதாகி சிறைக்கு செல்வது உறுதி”

image

ஜெகன் மோகன் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த நடிகை ரோஜா “கேலோ இந்தியா போட்டி நடத்துவதற்காக ஒதுக்கிய ₹100 கோடி நிதியில் முறைகேடு செய்ததாக” புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிபிசிஐடியிடம் புகார் அளித்துள்ளதாகவும், ரோஜா விரைவில் கைதாகி சிறைக்கு செல்வது உறுதி, அவர் செய்த ஊழல் விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என தெலுங்கு தேசம் கட்சியின் ரவி நாயுடு தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

ஹாட் ஸ்டாரில் வெளியான யாக்‌ஷினி வெப் தொடர்

image

வேதிகா நடித்துள்ள யாக்‌ஷினி வெப் தொடர், ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘முனி’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த வேதிகா, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகள் நடிப்பதை தவிர்த்த அவர் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள யாக்‌ஷினி வெப் தொடர், தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

News June 15, 2024

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி..!

image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் யுக்தி அதிமுகவிற்கு ஒன்றும் புதிது கிடையாது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அதிமுக புறக்கணித்தது. அன்றும், திமுகவின் அராஜக ஆட்சிக்கு எதிராக தேர்தலை புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 15, 2024

நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும்

image

குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக 2.1 மீ. முதல் 2.3 மீ. உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுலா செல்வோர் கடலில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News June 15, 2024

தேர்தலை கண்டு அதிமுக அஞ்சாது: இபிஎஸ்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே குறிக்கோள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து பேசிய அவர், தேர்தலை கண்டு அஞ்சுகிற கட்சியல்ல அதிமுக என விளக்கமளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடைபெறுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ஏற்கெனவே, திமுக ஆட்சியில் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News June 15, 2024

அதிமுகவின் முடிவுக்கு என்ன காரணம்?

image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதோடு, அத்தொகுதியில் பாமகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், இருகட்சிகளும் ஆதிக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் ஒரு சரிவை எதிர்கொள்ள வேண்டாம் என்று அதிமுக யோசித்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

News June 15, 2024

BREAKING: இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக, நாதக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், இபிஎஸ்ஸின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!