news

News June 15, 2024

கேஸ் ஏஜென்சிக்கு ஆதார் கார்டுடன் செல்லுங்கள்

image

கள்ளச் சந்தையில் சிலிண்டர் புழக்கத்தை தவிர்ப்பதற்காக e-KYC அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுவரை அப்டேட் செய்யாதவர்கள், சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு நேரில் சென்று e-KYC பதிவு செய்துகொள்ளலாம். ஆதார் அட்டை மற்றும் சிலிண்டர் புக்கிங் ரசீதை பயனாளர்கள் எடுத்துச் சென்றால் உடனடியாக கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, e-KYC அப்டேட் செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.

News June 15, 2024

துணை சபாநாயகர் பதவி கோரும் எதிர்க்கட்சிகள்

image

18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி நிறைவடைகிறது. ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இந்நிலையில், மக்களவையில் துணை சபாநாயகர் பதவி மறுக்கப்பட்டால், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை சபாநாயகர் பதவி குறிப்பிடத்தக்க அதிகாரங்களை கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News June 15, 2024

‘G.O.A.T’ படத்தில் பவதாரிணியின் குரல்

image

‘G.O.A.T’ படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் சில காட்சிகளில் இடம்பெறவிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மறைந்த பாடகியும், யுவனின் சகோதரியுமான பவதாரிணியின் குரலை ஒரு பாடலுக்கு பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

News June 15, 2024

கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

image

கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரிகள் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் குறித்த விவரம், ஆராய்ச்சி, கல்விக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களை கல்லூரிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

News June 15, 2024

e-KYC என்றால் என்ன?

image

அரசு சலுகைகள், சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு e-KYC கட்டாயம். e-KYC என்பது காகிதமற்ற KYC (Know Your Customer) என்று அழைக்கப்படுகிறது. இது வாடிக்கையாளரின் நற்சான்றிதழ்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் செயல்முறையாகும். எந்தவொரு நிதி நிறுவனத்திலிருந்தும் சேவைகளைப் பெற அனைவருக்கும் இது கட்டாயமாகும். இந்த e-KYC பதிவு செய்யாதவர்களால் அரசின் சில சலுகைகளை தொடர்ந்து பெற முடியாது.

News June 15, 2024

ஜப்பானை அச்சுறுத்தும் சதை உண்ணும் பாக்டீரியா

image

சதை உண்ணும் பாக்டீரியாவால் ஏற்படும் அரிய வகை கொடிய நோய் ஜப்பானில் பரவி வருகிறது. குறிப்பாக, டோக்கியோவில் இந்நோய் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்கும் இந்நோய், 48 மணி நேரத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. நடப்பு ஆண்டில் 145 பேரிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது நடப்பாண்டு இறுதிக்குள் 2,500ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

News June 15, 2024

இந்தியா-கனடா ஆட்டம் ரத்து

image

T20 உலகக் கோப்பை தொடரில், இன்று நடைபெற இருந்த இந்தியா-கனடா போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் சில நாள்களாக கனமழை பெய்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறவிருந்த Lauderhill மைதானம் அமைந்துள்ள பகுதியில், இன்று தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் ஆட்டம் ரத்தாகியுள்ளது. இதனிடையே, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

News June 15, 2024

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் ரயில்வே நிகழ்ச்சி

image

ரயில்வே அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. ரயில்வே துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை பிப்ரவரி 26ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரயில்வே பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ரயில் நிலையங்களை திறந்து வைத்தல் ஆகியவை அடங்கும். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 2,140 இடங்களில் 40,19,516 பேர் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

தமிழக வனத்துறை புதிய சாதனை

image

ஆமைகளின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழ்நாடு வனத்துறை சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஆண்டு 1.82 லட்சம் ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதன் எண்ணிக்கை 2.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில், கடலுக்குள் ஆமைகள் விடப்பட்டது தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என கூறப்பட்டுள்ளது.

News June 15, 2024

வாயால் வடை சுடுவது உங்கள் வேலை: ஸ்டாலின்

image

பாஜகவை தடுக்கும் அரணாக தமிழக எம்.பிக்கள் இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகத்தின் 40 எம்.பிக்களும் நாடாளுமன்ற கேண்டீனில் வடைதான் சாப்பிடுவார்கள் என சிலர் விமர்சிப்பதாக கூறிய அவர், வாயால் வடை சுடுவது பாஜகவினரின் வேலை என்றும், தமிழக எம்.பிக்கள் அவர்களின் ஆணவத்தை கட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வெல்லும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!