news

News June 16, 2024

ஜூன் 16 வரலாற்றில் இன்று!

image

*1487 – 34 ஆண்டுகால ரோஜாப்பூ போர் முடிவடைந்தது. *1773 – கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமாக வங்கம் அறிவிக்கப்பட்டது. *1846 – ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். *1893 – கலைத்தந்தை தியாகராஜனார் பிறந்த நாள். 1911 – நியூயார்க்கில் IBM தொடங்கப்பட்டது. *1940 – லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது. *1958 – அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட போராளிகள் தூக்கிலிடப்பட்டனர்.

News June 16, 2024

புதிய இலச்சினையை வெளியிட்ட உதயநிதி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் பேசிய அவர், இலச்சினையில் உள்ள மஞ்சள் நிறம் ஆற்றலையும், நீல நிறம் உத்வேகத்தை குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், அதில் உள்ள வட்ட வடிவம், விளையாட்டுத்துறை முன்னேற்றத்தின் சான்றாக பாதிக்கப்பட்டுள்ளது என வும் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

SUPER 8: இந்தியாவை எதிர்கொள்ளும் அணிகள்

image

மேற்கிந்திய தீவுகள் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-8 போட்டியில், இந்தியா 3 அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி ஆப்கனையும், 22ஆம் தேதி வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்ளும் இந்திய அணி, இறுதியாக ஜூன் 24இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும். இதில், குறைந்தது இரண்டில் வென்றாலும், அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிவிடும்.

News June 16, 2024

$15 பில்லியன் இழப்பை சந்தித்த மின்னணு உற்பத்தித் துறை

image

சீனாவுடனான மோதல் காரணமாக இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில், 15 பில்லியன் டாலர் உற்பத்தி இழப்பும், ஒரு லட்சம் பணிவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 5,000 சீன விசா விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள காரணத்தால், வணிக விரிவாக்கமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 16, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை ▶ குறள் எண்: 451
▶குறள்:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
▶பொருள்: அறமற்ற ஒழுக்கக்கேடான மக்களின் கூட்டத்தோடு பெரியோர் சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேருவர்.

News June 16, 2024

விரைவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

image

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்னும் 2 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஸ்லீப்பர் ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் பெங்களூருவில் (BEML) நடந்து வருவதாகக் கூறிய அவர், சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுடன் ரயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த ரயிலானது, ஒரு மணி நேரத்திற்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

News June 16, 2024

வெற்றிக்கு ஹர்திக்கின் ஃபார்ம் முக்கிய காரணம்: பதான்

image

இந்திய அணியின் வெற்றிக்கு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஃபார்ம்தான் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஈரம் இல்லாத உலர் ஆடுகளங்களுக்கு ஹர்திக்கின் பந்துவீச்சுதான் சரியாக இருக்கும் எனக் கூறிய பதான், அவர் பவுன்சர் & கட்டர் பந்துகளை வீசினால், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

News June 16, 2024

தேர்தல் முடிவில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை

image

சமூக செயற்பாட்டாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்குப் பதிந்ததை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “தேர்தலில் பாஜக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்குமுறையே ஆயுதம். அடக்குமுறையை எதிர்கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை. தேசம் அருந்ததி ராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 16, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 16, 2024

BHEL நிறுவனத்திற்கு ₹7,000 கோடிக்கு ஆர்டர் தந்த அதானி

image

BHEL நிறுவனத்திடமிருந்து ₹7,000 கோடி மதிப்பிலான மின் உற்பத்திக்கான உபகரணங்கள் & துணை பொருள்களை வாங்க அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது. அதானி குழுமத்தின் பவர் நிறுவனமானது, சத்தீஸ்கர் (ராய்ப்பூர்) & உ.பி.,யில் (மிர்சாபூர்) அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு தேவையான பொருள்களை BHEL நிறுவனம் தனது திருச்சி & ஹரித்வார் ஆலைகளிலிருந்து தயாரித்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!