news

News June 16, 2024

நாய்கள் விவகாரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

image

வெளிநாட்டு நாய்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களை வகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு மக்கள் கருத்துகளை கோரியது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகே, அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News June 16, 2024

அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் கட்டுப்பாடு?

image

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் யோசிக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் சரளமாக பதிலளிப்பார். தமிழக அரசியலில் இதுபோன்ற திறமை சிலருக்கு மட்டுமே உண்டு. அத்தகையவர் அண்மையில் “இனி பேட்டி கொடுப்பதாக இருந்தால், கட்சி அலுவலகத்தில் மட்டுமே கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார். பாஜக மேலிடம் விதித்த கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

News June 16, 2024

ரயில் கட்டணச் சலுகை ரத்து தொடரும்: மத்திய அரசு

image

ரயில் கட்டணச் சலுகை ரத்தை திரும்பப்பெறும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கட்டணச் சலுகை ரத்தால் 4 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகத்துக்கு ₹5,800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், சராசரி மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்களில் நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News June 16, 2024

GV கொடுத்த ‘கிங்ஸ்டன்’ அப்டேட்

image

விரைவில் வெளியாக இருக்கும் ‘கிங்ஸ்டன்’ படம் தான், தன்னுடைய திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடலை மையமாக வைத்து ஹாரர் மற்றும் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’, ஜி.வி.பிரகாஷ்குமாரின் 25ஆவது படம் என்பது குறிப்பிடதக்கது.

News June 16, 2024

ஒடிஷா முதல்வரிடம் உள்ள இலாகாக்கள்

image

ஒடிஷா முதல்வராக கடந்த 12ஆம் தேதி மோகன் சரண் மஜி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, முதல்வர் மஜி உள்துறை, நீர்வளம் உள்ளிட்ட 5 துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டார். துணை முதல்வர் பிரவதி பரீடாவுக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News June 16, 2024

மீண்டும் நாய்க்கடி சம்பவம்

image

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர் நிகழ்வாகி வருகின்றன. அந்தவகையில், சென்னை அடுத்த செங்கல்பட்டில் தெருவில் விளையாடிய 2 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்களை வீசி, நாய்களை விரட்டினர். இதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 16, 2024

கனிமொழிக்கு பதவி; டிஆர் பாலு அதிருப்தி?

image

டிஆர் பாலுவிடம் இருந்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார், டெல்லியில் எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை என சக எம்பிக்கள் முன்வைத்த குற்றச்சாட்டே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தன்னிடம் இருந்த பதவி பறிபோனதால் டிஆர் பாலு அதிருப்தியில் இருப்பதாகவும், புகார் அளித்த எம்பிக்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

News June 16, 2024

மீனும், முட்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?

image

மீனில் புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் இரண்டும் கலந்துள்ளன. முட்டையிலும் புரோட்டின் சத்து அதிகமுள்ளது. இதனால் சத்து நிறைந்த மீனையும், முட்டையையும் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக் கூடாதென உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர். அப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொண்டால், புரத ஒவ்வாமை, தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News June 16, 2024

மேலிட உத்தரவால் அதிமுக போட்டியிடவில்லை: ப.சிதம்பரம்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கு மேலிட உத்தரவே காரணம் என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை வெற்றி பெற செய்யவே அதிமுக தேர்தலை புறக்கணித்து இருப்பதாகக் கூறிய அவர், மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுவதற்கு இதுவே சான்று என்றும் சாடினார். மேலும், INDIA கூட்டணியினர் திமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

News June 16, 2024

பிஹாரில் ஹாஸ்டல் உணவில் பாம்பு வால்?

image

மும்பையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட ஐஸ் க்ரீமில் கைவிரல் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பிஹாரின் பங்கா மாவட்டத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு வாலின் ஒரு பகுதி இருந்தது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவை சாப்பிட்டு வாந்தி, மயக்கத்தினால் பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!