India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாததால், மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அந்த சின்னத்திலேயே போட்டியிட அக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர சின்னமாக புலி சின்னத்தை மீண்டும் கேட்க சீமான் முடிவு செய்துள்ளார். புலி சின்னம் தரவில்லையெனில் விவசாயி சின்னத்தை கேட்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.
‘ஜவான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு PAN இந்தியா அளவில் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அட்லீ ₹60 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
திருச்சி லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேரு தன்னை புறக்கணிப்பதாக நேற்றைய தினம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில், தான் இயற்கை எய்திவிட்டதாகவும், தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இவ்விவகாரம் பூதாகரமான நிலையில், அந்த சர்ச்சைப் பதிவை தற்போது அவர் நீக்கிவிட்டார்.
தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வளராது என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 3-5% வாக்குகள் மட்டும்தான் கிடைத்துள்ளதாகவும், அக்கட்சிக்கு கிடைத்த மற்ற வாக்குகள் கூட்டணியில் இருக்கும் பாமக உள்ளிட்ட கட்சிகளுக்காக கிடைத்தவை என்றும் அவர் கூறினார். அந்த வாக்குகளும் மோடி பிரதமராக வேண்டுமென்ற எண்ணத்தில் மக்கள் அளித்தவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
*பாகற்காய் பொரியல் செய்யும் போது, முளைக்கீரை அல்லது அரை கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கினால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். *காய்கறி மற்றும் கீரை வகைகளை வதக்குவதை விட, கூட்டாக சமைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகாது. *கேசரி செய்யும் போது, கடைசியாக கொஞ்சம் வறுத்த கடலை மாவு சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும். *மிளகாய் வறுக்கும் முன், அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்தால் நெடி வராது.
விளைச்சல் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால், விரைவில் விலை ₹100ஐ தொடலாம் என்றும் கூறப்படுகிறது. வரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் வரை ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக உள்ள நயன்தாரா, த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ₹10 கோடி- ₹12 கோடி வரை சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வாரிசு, சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரஷ்மிகா, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் ₹13 கோடி சம்பளம் வாங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழிசைக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த பலர் ஆளுநர்களாக உள்ளனர். ஆனால் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததோடு, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனால் அவரிடம் தற்போது எந்த பதவியும் இல்லை. அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையின் தலைமையின் கீழ் அவர் கட்சி பணி செய்வாரா என பாஜகவினர் இடையே கேள்வி எழுந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்று கூறிய அவர், இத்தேர்தலுக்கு பின் தங்களுக்கு என தனிச் சின்னம் கேட்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சொல்லும் காரணங்களில் தான் உடன்படுவதாகவும் அவர் கூறினார்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எதிர்ப்பாற்றலை மேம்படுத்த ‘வைட்டமின் சி’ அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து, எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மை அவற்றுக்கு உண்டு. ஆகவே நெல்லிக்காய், எலுமிச்சைப் பழம் ஆகியவற்றை சேர்த்துக்கொண்டாலே போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள்.
Sorry, no posts matched your criteria.