India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைத்துள்ளார். தடைகள், எதிர்ப்புகளை துணிவுடன் எதிர்கொண்டு நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்திய அவர், என்டிஏ கூட்டணியின் வெற்றிக் கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும் எனவும் கூறினார். என்டிஏ கூட்டணி சார்பில் அங்கு பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.
உலக தந்தையர் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது தந்தை துரைராஜ் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். திமுகவை அண்ணா தொடங்கியது முதல் அரசியல் களத்தில் தனது தந்தை இருந்ததாக அவர் கூறியுள்ளார். “பட்டறிவாயினும் மேதையவர், என்னை பட்டம் பெற வைத்தவர்” என்ற கவிதையையும் தந்தையர் தின வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, குறிப்பிட்ட உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்கிறார்கள். உலர் பழங்களில் உள்ள E சத்துகள் வயது முதிர்வால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்க உதவும் எனவும் ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி கண்களை பாதுகாக்கும் என்றும் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டுக்கான உலகளவில் மதிப்புமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலை Kantar Brandz நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் நான்கு இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. TCS நிறுவனம் 46ஆவது இடத்தையும், HDFC – 47 AIRTEL- 73, INFOSYS – 74 ஆகிய இடங்களையும் பிடித்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தையும், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 இடங்களை பிடித்துள்ளன.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 வெற்றியை பெற்ற அணிகள் என்ற பெருமையை இந்தியா (2012-14) மற்றும் இங்கிலாந்து (2010-12) அணிகள் கொண்டிருந்தன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதன் காரணமாக, தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற IND, ENG அணிகளின் சாதனையை AUS அணி (2022-24) சமன் செய்துள்ளது.
ஏழைகளுக்கு, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் சமத்துவமின்மையை காட்டுவதாக கூறிய அவர், தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் பாதிக்கும் மோசடி என்று சாடினார். இத்தேர்வுக்கு எதிராக அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் உயிர் மாய்த்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி வெளியேறும் நிலை இருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், நெட் ரன்ரேட் அடிப்படையில், அந்த அணியும், இங்கிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக இந்தியா உள்ளிட்ட 5 அணிகள் தகுதி பெற்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. வைகுந்தம் காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. சுமார் 36 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகே அனைவரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 82,886 பேர் சாமி தரிசனம் செய்தனர். 44,234 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கையாக ₹4.09 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.
பெரியார் முன்வைத்த சமுகநீதி அரசியலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி செயல்படுவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியை தங்கள் கட்சி நட்பு சக்தியாகத்தான் பார்ப்பதாகவும், அக்கட்சி மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாதென்றும் குறிப்பிட்டார். பெரியார் அரசியலுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி செல்வதை ஆபத்தாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என கூறும் குழந்தைகள் நல மருத்துவர்கள், இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும் எனவும், எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.