India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோகன் நடிப்பில் ஹரா படமும், ராமராஜன் நடிப்பில் சாமானியன் படமும் அண்மையில் வெளியாகின. இந்த 2 படங்களும் வெற்றி அடைந்து விட்டதாக மோகனும், ராமராஜனும் பேட்டியளித்தபடி இருக்க, உண்மை நிலவரமோ வேறு மாதிரி என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். 2 படங்களும் தோல்விதான் எனவும், அவர்களின் பழைய கதையை தோண்டி எடுத்து You Tube சேனல்கள் நல்ல லாபம் பார்த்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம் என வாழ்த்தியுள்ளார். மேலும், தந்தை கருணாநிதி உடனான தனது புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 37-38°C இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என எலான் மஸ்க் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி, இந்தியாவில் EVM என்பது ஒரு கருப்புப் பெட்டி எனவும், அதை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கவலை அளிப்பதாகவும், அரசின் பொறுப்பின்மையினால் ஜனநாயகம் மோசடிக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை (X தளம்) வாங்கியதில் இருந்து, பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில், சுமார் 6,000 ஊழியர்களை இதுவரை அவர் பணி நீக்கம் செய்துள்ளதாக ‘தி டெலிகிராஃப்’ ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 80% ஆகும். இதனால் தயாரிப்பு, மேம்பாடு, டிசைன் உள்ளிட்ட பிரிவுகளில் பலர் வேலையை இழந்துள்ளனர்.
அனைத்து குழந்தைகளுக்கும் தனது தந்தைதான் ஹீரோவாக இருப்பார். குழந்தைகளின் கரம் பிடித்து முதல் அடியை எடுத்து வைக்க பழக்குவது தந்தைதான். பொறுப்புணர்வுடன் கூடிய தந்தையின் அன்பு, சில சமயங்களில் வெளிப்படையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்பதை யாராலும் மறுக்க முடியாது. அத்தகைய தன்னலமற்ற தந்தைகளுக்கு சர்வதேச தந்தையர் தின வாழ்த்துகள்.
தமிழில் காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை சரண்யா. தற்போது நடிப்பில் இருந்து விலகியிருக்கும் அவர், எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். தீவிர இறைபக்தி உடையவரான இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், வேண்டுதலுக்காக திருத்தணி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
நடாலி டாவ் என்ற 52 வயதான மாரத்தான் வீராங்கனை தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் 12 நாள்களில் 1,000 கி.மீ. ஓடி சாதனை படைத்துள்ளார். இடுப்பில் ஏற்பட்ட காயத்தையும், வெயிலில் ஷூக்கள் உருகியதையும் கூட பொருட்படுத்தாமல் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் மலேசியாவை வேகமாக ஓடி கடந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு அண்மையில் பதவியேற்றார். அந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்களும், தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், ரஜினி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆனால் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் தோல்வியால் மனம் துவண்டுபோயிருப்பதும், அங்கு சென்றால் முக்கியத்துவம் இருக்காது என கருதியதுமே காரணமாகக் கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுந்ததால், இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாகவும், உழைப்பு, நேரம், பணம் விரயம் செய்ய விரும்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தேமுதிகவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.