India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம், ஏமாற்று வேலை என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஒரு லட்சம் விவசாயிகளே பயன்பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகாவிடம் கேட்டு பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதன் நம்பகத்தன்மை இன்னும் கேள்வி குறியாகவே நீடிக்கிறது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, எலான் மஸ்குக்கு ஆதரவாக, மின்னணு வாக்கு இயந்திரங்கள் ‘கருப்புப் பெட்டி’ என ராகுல் காந்தி பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
வடமாநிலங்களில் நடப்பது போல், கோவையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து கணினி உதிரி பாகங்கள் வாங்க வந்தவர்களின் காரை துரத்தி வந்து மறித்த முகமூடி கொள்ளையர்கள், ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும், ஓட்டுநர் துணிச்சலாக செயல்பட்டதால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது.
சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சியை கண்டுள்ளதாக, எடப்பாடி பழனிசாமியை சசிகலா மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதிமுக முடிந்து விட்டது என யாரும் கருத வேண்டாம் என கூறிய அவர், தனது என்ட்ரி ஆரம்பமாகிவிட்டதாக சவால் விடுத்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து வரும் சூழலில், அதிமுக தொண்டர்களை சசிகலா தன் வசப்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என, எலான் மஸ்க் கூறிய கருத்து உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் உள்ள EVM-கள் பாதுகாப்பானது. தேவைப்பட்டால் எப்படி தயாரிப்பது என கற்றுத்தருகிறோம் என்று கூறினார். இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மஸ்க், எதையும் ஹேக் செய்யலாம் (Anything can be hacked) எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான் பொறுமையாக இருக்க மாட்டேன் என ஆவேசமடைந்த அவர், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் அரசியல் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தொண்டர்களை சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்க உழைப்பேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியினர் சாதி அரசியல் செய்து வருவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நானும், ஜெயலலிதாவும் யாரிடமும் சாதி பார்த்து பழகியதில்லை எனக் கூறியுள்ளார். அவ்வாறு நான் சாதி பார்த்து பழகியிருந்தால், எடப்பாடி பழனிசாமியை, தமிழக முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை, அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்ரீத் பண்டிகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், சீமான், சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடையவுள்ளது. அவருக்கு பிறகு, கவுதம் காம்பீர் அப்பதவிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வாரத்தில் கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்பட்ட தகவலை கிரிக்கெட் வாரியம் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, நாதக கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணியில் விசிகவை இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விகடன் ஊடகத்திற்கு பேட்டி அளித்த விசிக தலைவர் திருமாவளவன், INDIA கூட்டணியில் உள்ள விசிக டார்கெட்டை எட்ட முடியாத சூழலில், இலக்கைப் பாதியில் விட்டுவிட்டு வேறு நிலைப்பாடு எடுக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.